பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 37 லாலும் அறியலாம். காசிபர் கடலில் நீர் வற்றிய போதில் ஆதித்தோற்றம் இவர்க்குக் கூறுதலானும் இவர் பழமை உய்த்துணரலாகும். வடபாற்று வரையாண்டு 49 வழி முறை வந்த வேளிர் (புறம், 201) என்று கபிலர் கூறியதனால் இவள் தோற்றம் தென்னாட்டின்கண் ஆகாமைதுணிையப்பட்டதாம். இவற்றால் வடநாட்டுள் இவர் புரோசர் என வழங்கப்பட்டதன் காரணம் உணரலாம். இனி இக் குலத்து ஆண்மக்கள் வாய்த்த இடத்துத்தன்மையும் உதவும் பெருவன்மையுடையரென்பது சலெளகன், மேகவாகனன் முதலிய கச்மீரமாகிய வேள்புல வேந்தர் வரலாற்றால் நன்கறியப்பட்டது. இதனால் உபகாரத்திற்கே வேளாண் வேளாண்மை முதலிய சொற்கள் வழங்கலாயின. ' 'வேளாண் பெருநெறி' என்பது தொல்காப்பியம். வேளாண்மை உபகாரியாந்தன்மை என்பர் பரிமேலழகர் (குறளுரை, 613). இவ்வழக்கு வேள் என்னுங் குடிப் பெயரடியாக உண்டாயினதென்பது இத்தென்னாட்டு மொழியினுமல்லாமல் புத்தர் மதக் கொள்கைகள் நிறைந்த வடநாட்டுப் பாலி மொழியிலும் பயிலக் காணலாம். அம் மொழியில் வேளாமா' என்பவன் பரமோபகா ஆவன். புத்தக ஜாதக சரிதையில் மாரன் இரந்தவற்கு ஈந்தால் இரும்புருகும் தீ நரகில் நின்னை வீழ்த்துவல் என்ற போதும் ஈந்து புத்தர் தீ நரகில் வீழத் துணிதல் கூறும் (ஜாதக சரிதை vol. 1 பக். 228, 101. கேம்பிரிட் மொழி பெயர்ப்பு) புத்தர் எல்லாவற்றையும் வழங்கும் வேளாமா ஆகிய பார்ப்பனன் ஒருவனுடன் நட்பு கொள்ளுதலும், ஏழு உயர்த்த விலைப்பொருள்களை இந்நாவலந் தீவு நடுங்கும் படி பிறர்க்கு வழங்குதலும் வேளாமாஸுக்தம் கூறும். வேளாம என்பது வேளாந்மா என்பதன் மரூஉருவாகும். இமயமுதற் குமரிவரை இவ்வழக்கு உபகாரத்திலே ஒத்துப் பயிலல் இவற்றாலுணர்க. 'வேளான் பெருநெறி (தொல் .கள. 24 என்புழி இளம்புரணரும் 'வேளான் சிறு பதம் (புறம் 74) என்புழிப் புறப்பாட்டுரைகாரரும் வேளாண்மை உபகாரமென்று கொள்ளுதல் காண்க. த.கு.வே-3