பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40. தமிழகக் குறுநில வேந்தர் விதஸ்தா நதி (வேள் யாறு) ஒடுகின்ற ஒரு பள்ளத்தாக்கிலுள்ள பிரதேசம் துவாரவதியாகும் (vol. II 404) தமிழ் வழக்குகள் இவற்றாற் கபிலர் வேளிர் வடபால் ஆண்டதாகக் கூறிய பழையவூர் இஃதென ஐயமறத் தெளியலாம். இனிச் சங்கத்துப் பத்துப் பாட்டினும் எட்டுத்தொகை யினுங் காணப்படாது சிலப்பதிகாரத்துப் பாண்டியர்க்குக் கூறிய கடல் வடிம்பலம்ப நின்றதும், மழை பிணித் தாண்டதும், இக்கச்மீர வேந்தர் செயல்களாக பழங்கதைகளைத் தொகுத்துக் கூறிய தரங்கினியிற் கேட்கப்படுதலான் இத்தென்னாட்டிற்குங் கச்மீர தேசத்திற்குமுள்ள பழந்தொடர்பு இனிது உய்த்துணரலாம். வேள் நதி பாயும் நிலத்துள்ளான் பழங்கதையும் பாண்டி நாட்டுப் பழஞ்செய்தியும் பலபடியாக ஒத்திருத்தலை உணர்ந்து கொள்ளுமிடத்து அந்நாட்டிற்கும் நந்தென்னாட்டிற்கும் பண்டே நேர் தொடர்புன்மை இனிது துணியப்படுமென்க. காந்தார தேசத்தினின்று (கந்தருவ நாட்டினின்று) கச்மீரத்தை ஆளுதர்க்குக் கொணரப்பட்ட மேகவாகனன் என்னும் வேந்தன் எவ்வுயிரையும் கொல்லா விரதமுடையவனென்றும், அவன் தென்னாட்டு ரத்நாகரம் என்னும் கடற்கரையிற் பனைமரப் பொழிவிற் படையுடன் வந் திறங்கிய போது, அங்கு ஒரு துர்க்கை கோயிலையும், அதன் முன்னர் ஒருவன் தலை கவிழ்ந்து நிற்பதையும், ஒரு முரட்டுக் கிராதர் தலைவன் அவனை வாளாலரிய ஓங்கியதையும் கண்டு பொறானாகி, வேடர் தலைவன் ஒருவ்ன் தன் மகளிற்கு நோய் நீங்க வேண்டி இவ்வாறு நரபலியிடப் புகுவதை வினவியறிந்து ஆங்குத் தன்னைப் பலியிடும்படி அவ்வேடர் தலைவனையிரந்தனன் என்றும், அவ்வமயம் கடற்தெய்வமாகிய வருணன் அவ்வரசன் எதிரே தோன்றி, இவன் அவளுடைமையை வியந்து