பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 41 பாராட்டி அவ்வரசன்கணுள்ள தன் குடையை மீளவும் இரந்து பெற்று உவந்து அவனை வரங்கொள்க என்ற அளவில், அவ்வரசன் தானும் தன் படையும் இலங்கை வெல்லற்குச் செல்ல வேண்டற்கண் உதவுக என்றனன் என்றும், அது கேட்டுக் கடற் கடவுள், அவன் படையுடன் கடலில் நடந்து செல்லும் வண்ணம் கடல்நீரை இறுகச் செய்து வழிவிட்ட அளவில், அதன் மேற் காலால் நடந்து இலங்கையிற் சென்று வீடணனால் (வீடணன் வழியி னனால்) உபசரிக்கப் பெற்றுக் கடற்கரைக்கப்பாலும் வென்றதற்கறிகுறியாகப் பாரத்துவசமும் அளிக்கப் பெற்று மீண்டனன் என்றும் மூன்றாந் தரங்கம் (29 முதல் 78 வரையும்) கூறுதல் காணலாம். இம்மேக வாகனனே மேகத்தைச் சிறையிட்டனன் என்பது தரங்கினி 21 முதல் 26 வரையில் உள்ள சுலோகங்களிற் கண்டு கொள்க. கடற்றலை மிதித்து நடந்த இக்கதையினையே அடியிற்றன்னளவர சர்குணர்த்தி (சிலப். காடு) என்பதனால் இளங்கோவடிகள் குறித்தாரென்னலாம். அடியார்க்கு நல்லார் இவ்விடத்து முன்னொரு காலத்துத் தனது பெருமையின தவவை அரசர்க்குக் காலான் மிதித்துணர்த்தி வேலானெறிந்த பழம் பகையினைக் கடல் பொறாது’’ என உரை கூறுதலான் உண்மை உணர்க. ஈண்டுக் காலான் மிதித்து என்றது அக்கடற்றலையில் இவ்வரசன் மிதித்து நடந்த தனைக் குறித்ததென்பது தெள்ளிது. இவ்வுதவியைப் பாராட்டி இவ்வரசன் முந்நீர்க் கடவுட்கு விழாவெடுத் திருக்கலாம் என்று நினைதல் பொருந்தியதாகும். முந்நீர் விழாவின் நெடியோன்’ (புறம், 9) என்பதற்குப் பழையவுரைகாரர் கடற்றெய்வத்துக்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன்' எனக் கூறி முந்நீர்க்கண் வடிம்பலம்ப நின்றான் என்ற வியப்பால் நெடியோன் என்றார் என விளக்குதல் காண்க. இக்கதையினுண்மை மேல் அழற்படு காதைக் கண் இந்நெடியோனாகிய பாண்டியனை வருண பூதத்திற்குவமை கூறிவிடத்துச்