பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 43 வரையுள்ள இந்நாவலந்தீவு முழுவதையும் ஆண்டனன் என்பது புலனாகும். இங்ஙனம் அன்றாயின் தென்கடற் கரையிற் சாமுண்டி கோயிலின்முன் நரபலியிடப்படுவான் 'மேகவாகனன் ஆட்சியிலும் எனக் கூவியழுதல் இயையா தென்றுணர்க. இதற்கியையவே மதுரைக் காஞ்சியிற் பண்டைப் பாண்டியரைத் 'தென்குமரி வடபெருங்கல் குணகுட கடலா வெல்லை தொன்று மொழிந்து தொழில் கேட்ப, வேற்றமொடு வெறுத் தொழுகிய கொற்றவர்’ (அடி. 70–72) எனக் கூறுதல் நினையலாம். இவன் (மேகவாகனன்) வெற்றி விருப்பம் மக்களை அச்சத்தினின்று விடுவித்து வைக்கும் வீரத்தொடு கூடி ஜிநதேவனாலும் பொறாமைப் படும் வண்ணம் விளங்கியது ஷ. 11. 28) என வருதற்கும் கொலை வென்றியொடு வெறுத்து கொல்லா தொழுகிய கொற்றத்தையுடையவர்' என மதுரைக் காஞ்சி நூலார் கருதியதற்கும் இளங்கோவடிகள் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு உரைசால் சிறப்பினெடியோன் என்றதற்கும் உள்ள ஒற்றுமையை நோக்கிக் கொள்க. நச்சினார்க்கினியர் மதுரைக் காஞ்சியில் வெற்றி யொடு வெறுத்து - வென்றியொடு செறிந்து என உரை கூறினார். நல்லது தேறுக. பாண்டியர் தலைநகர்க்கும் கச்மீர தேயத்திற்குமுள்ள தொடர்பு புராண கதைகளிலுங் கேட்கப்பட்டதேயாகும். கல்லானைக்குக் கரும்பருத்திய திருவிளையாடலில் மதுரைக்கு வந்த சித்தர் தம்மை கச்மீர நாட்டவரென்று கூறுதலான் இஃதுணரலாம். ஆனாலுமிப்போதறிகாஷ்மீர நாட்டிற்காசிதானாமிருக்குந் தலமாகும்’ ’ என வருதலானறிக. ஈண்டுக்காசி என்றது காசர் இருப்பாகிய ஊரினையென அறிக. தரங் கினியிற் காசாலயம்' என (v. 56, 58) வருதலான் உணரலாம். காசர் கச்மீரத்திற் சிறந்த குடியினராவர்.