பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. கோசர்


கொங்கிளங் கோசர், நான் மொழிக்கோசர், வாய்மொழிக் கோசர், துனைதேர்க் கோசர் என்று பழைய தமிழ் நூல்களில் குறிப்பிடப்படும் கோசர் குடிபற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். வத்ஸம் என்னும் வட சொல்லுக்கு இளமை என்ற பொருள் உண்டு. வத்ஸகோசரே, இளங்கோசர் என ஊகிக்கலாம். கோசம் என்பது ஓர் அரிய சூள் முறையைக் கையாண்டதனால் கோசர்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் வன்கட் சூழ்ச்சியில் வல்லவர். கோசர், வேளிரை அடுத்து காஷ்மீர தேசத்திலிருந்து வந்தவர். வம்பமோரியர்க்கு முன்னணியாக நின்று மோகூர் மன்னனை எதிர்த்தவர்கள். வேளிரும், கோசரும் நீண்ட பகைமையால் பேரரசர்களின் படையில் உறுதுணையாக நின்றவர்கள். அகுதை, திதியன், குறும்பியன், ஆதனெழினி, நமும்பன் கோசரில் சிறந்த வீரர்கள். இப்பழம்தமிழ்க் குறுநில வேந்தரைப் பற்றிச் சங்க நூல்கள் குறிப்பிடுவதில் ஒரு பகுதி இக்கட்டுரையாக வெளி வருகிறது. இன்றும் காஷ்மீர மக்கள் தம்மைக் “கோஷர்” என்று கூறிக் கொள்வது. குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகார அரும் பதவுரைக்காரர்,

“கொங்கிளங் கோசர் தங்கணாட் டகத்து
நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய
மழைதொழி லென்று மாறாதாயிற்று”

(சிலப். உரைபெறு கட்டுரை)

என் புழிக் கோசரைக் “குறும்பு செலுத்துவார் சில வீரர்” எனவுரைத்தார். அடியார்க்கு நல்லார் ஈண்டுக்