பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

55

“வளங்கெழு கோசர் விளங்குபடை”

(அகம். 205) எனவும்

“வென்வே, லிளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
 இகலின ரெறிந்த வகலிலை முருக்கிற்
 பெருமரக் கம்பம் போல”

(புறம். 169) எனவும்

“வலம்புரி கோசரவைக் களத்தானும்”

(புறம். 28:) எனவும்

கூறுதலான் இவர் வேற்படையான் வென்றியெய்திய பெருந் தேர் வீரரென்று தெரியலாவது. “இரும்பிடம் படுத்த” என்புழிப் பழையவுரைகாரர் இருப்பினை வேலென்றே கொண்டார்.

வலம்புரி கோசரவைக் களம் எள்றதனாலிவர் தந்தம் வடை வெற்றியைக் காட்டவல்ல போரவைக் களம் வைத்துப் போற்றின ரெனத் தெரியலாம். இவர் நன்றல்லாத காலத்தும் தம்முடைய நட்பிற் கோடாதவரென்பதும், நெடுங்காலஞ் சென்றேனும் கருதியது முடிக்கும் பெரிய சூழ்ச்சியையுடையவரென்பதும், தமக்கே சிறப்பாக வாய்மையை விடாது போற்றிப் புகழ் படைப்பவரென்பதும், தம்மகத்துப் புக்கவறியரை நன்று தாங்கும் பேரளியுடையவரென்பதும் பிறவுஞ் சான்றோர் பாடல்களானன்கறியக் கிடப்பனவாகும்.

“நன்றல் காலையு நட்பிற் கோடார்
சென்று வழிப்படு உந்திரிபில் சூழ்ச்சியிற்
.........கோசர்”

(அகம். 113) எனவும்

“ஒன்று மொழிக் கோசர்”

(அகம். 196) எனவும்

“வாய் மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர்”

(அகம். 25) எனவும்

“கோசர் நன்மொழிபோல வாயாகின்றே”

(குறுந்.15) எனவும்