பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 தமிழகக் குறுநில வேந்த ர் நந்தை ஊன்றுப் புடைய யாமையின் புறத்து உடைத்துத் தின்பர் என்னுமிதனால் தொகுத்து விளங்கச் சொன்னமை யாற்றொகை மொழியாயிற்று: 'வச்சத் தொள்ளாயிர முழுதும் தொகை மொழியெனக் கொள்க." என் வச்சத் தொள்ளாயிரப் பாட்டை எடுத்துக்காட்டி விளக்கிய வாற்றான் இஃதுணரலாம். வாடை குளிர மருந்தறிவா ரில்லையோ கூட லினியொருகாற் கூடாதோ... ஒடை மதவார ணத்துதயன் வத்தவர்கோ னாட்டிற் கதவான தோதமியேன் கண்' (பெருங். முகவுரை. பக்.9) என்ற பழம் பாடலும் இவ்வச்சத் தொள்ளா யிரமே யாகும். இவற்றான் முன்னமே கோசம் என்னும் ஊரில் அர சாண்ட வத்ஸ தேயத்தவர் வழியினர் இத் தென்னாடு புக்கு வாழ்ந்து வழங்கிச் சான்றோர் பாடல் பெற்றது நன்கு துணியலாம். இவ்வச்சத் தொள்ளாயிரப் பாட்டில் வச்சத் திளங் கோவை' எனப் பாடியதனால், இந்நாட்டுக் (குடியேறியவன் வச்சத்திளங்கோவேந்தன் வழியினன் என்று தெளியலாகும். இவன் கோசத்தினின்று இங்கு வந்தவன் வழியினனா தலால் இவன் வழிக் கோசரெல்லாம் இளங்கோசர் என்று வழங்கப் பட்டனரென உய்த்துணரலாம். இதனாலேதான் அடியார்க்கு நல்லார், கொங்கு மண்டிலத்து இளங்கோ வாகிய கோசர் என உரை கூறினாரென்று துணியலாம். இதனாற் கோசர் தமிழ் மூவேந்தர் இளங்கோ வழியின ரென நினைதற்காகாமை யுணர்க. அங்ஙனம் நினைதற்கு மேற்கோளில்லாமையும் நோக்கிக் கொள்க. இனி இக் கோசாம்பியை ஆண்ட அரசரே இளன் என் னும் திங்கட் குலத்து வேந்தன் வழியினரென்றும், அது பற்றியே அவன் வழிவேந்தர் இளங்கோ எனப் பெயர்