பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 தமிழகக் குறுநில வேந்தர்

| பொருந்தாதாம். 'ஊர்முது கோசர் (அகம். 262), என வழங்கலான், இவர் எல்லா மக்களும் போன்று யாக்கை மூத்துக்கழிதலுண்டென்க. இதனால் இவரை இளங் கோசர் எனப் பல்லிடத்தும் வழங்குவது இவர் குடி பற்றி யது அல்லது நாடு பற்றியதெனின் நன்கு பொருந்து மென்க. இளன் வழியிற் குருகுல முண்டாதலும் அக்ருரு குலத்து உதயணன் பிறத்தலுங் கண்டு. இவ்வுண்மை துணியலாம். 'குரு குலத்தரசன் சாயாச் செங்கோற் சதானிகன் மகன் உதயணனாதல் நோக்கிக் கொள்க. இவ்வுதயணனுக்குப் பின்னே இவன் குலத்தவர் பலர் வத்ஸ நாட்டுக் கோசத்தினின்று முதலிற் கொங்கிற் குடி யேறி யிருந்தது, 'கொங்கு மண்டிலத்துட் பல பாகங் களில் வித்தவன். வத்தராயன், வச்சராயன் என்னும் பெயர்கள் இக்காலத்து வழங்கப் படுவன என்று மஹா மஹோபாத்யாயர் Dr. உ. வே. சாமிநாதையரவர்கள் பெருங்கதை முகவுரையிற் கூறுதலானும் வலியுறுதல் கொங்கு வேளிர் உதயணன் பெருங் கதையைத் தமிழிற் பாடுதற்கும், இக் கொங்கிற் குடியேறிய கோசர் மரபிற் பெருவள்ளலொருவன் காரணமெனின் அதுவும் நன்கு பொருந்துமென்க. உதயணன் தாயின் குலமான ஏயர் குலமும் இந்நாட்டுக் குடியேறி யிருந்தது 63 நாயன் மாருள் ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்னும் பெய ரானன்கறியலாகும். இதனால் உதயணன் தாய் மரபின ரும் இங்கு வந்து வதிதல் காணப்படும். கோசம் ஆண்ட உதயணன், புத்தர் அவதரித்த நாளில் பிறந்தவன் என்று கூறுதலான் இவன் பழமை நன்குணரலாகும். இவனை மத்ஸ்ய புராணமுங் கூறும். இனி இக் கோசரைப் பற்றி நல்லிசைப் புலவர்கள் கூறிய சிறப்பியல்புகள் பலவும் கோசாம்பியை ஆண்ட உதயணன் நண்பினர்க்குப் பெரிதுமொத்து விளங்குதல்