பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

69


மோரியர் குறைத்த குன்றத்து அறைவாய் கள்ளக்குறிச்சி மலையிடை வழியாகும்; அல்லது செங்கண்மமராஅத்து அமைவாய் வழியாகு மென்க. இவ்வூரே செங்குட்டுவன் பொருது வென்றதா மென்பதும், கோசர் வந்துதவியதாகு மென்பதும், குட்டுவனஞ்சூர், கோசர்பாடி என்னும் ஊர்கள் இம் மோகூர்ப் பக்கத்துண்யான் உய்த்துணரலாம்.

மோகூரை யடுத்துள்ள ஆலம்பலம் என்ற சிற்றுாரே கோசர் தோன்றிய மூதாலத்துப் பொதியிலாகுமென்க. பொதியில் அம்பலமென்பது தமிழ் வழக்கு. இம்மோகூரிற் பெரிய அகன்ற பாழ் மேடு உள்ள நிலமே பழைய அரண்மனை இருந்த இடமாகு மென்பர்.

த.கு.வே-5