பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சா. இராகவய்யங்கார் 71

       கொடியணியேனம் பொடியணிந்து கிடப்ப 
       வடதிசை வாகை சூடித் தென்றிசை
       வென்றி வாய்த்த வன்றாள் விடலை, வளவன்
       இமிழிசை வேங்கடம் போலத் தமிழகத்து 
       நாவலொடு பெயரிய ஞாலங்
       காவல் போற்றி வாழிய நெடிதே'

| எனவும் வருவனவற்றால் உய்த்துணரலாகும். இவற் றுட் கச்சியிற் றேமாவி னிழலமர்ந்த சிவபிரானை வாழ்த்திப் பரவுவதும், வளவன் வேங்கடம் போல நெடிது வாழ்தற் பொருட்டு எனக் கூறுதலான் உணரப்படும். i

      மேற்குறித்த மேற்கோளிற் கொடியணி யேனம் பொடி வணிந்து கிடப்ப வடதிசை வாகை சூடி என்றதனால் சளுக்கியருடைய பன்றிக்கொடி தரைப்புழுதி படிந்து கிடத்தல் கூறியது கொண்டு வளவன். சளுக்கியரை வென்றது புலப்படுதல் காணலாம். இவ்வளவற்குக் கச்சியும் வேங்கடமும் உரியனவாய காலம் சளுக்கியரை. வென்றதன்பின் என்பது பொருந்தும்.

' வடவர் வாட வென்ற வென்றி இவ் வுருத்திரங் கண்ணனாரே பட்டினப் பாலையுட் டிருமா வளவற்குக் கூறலான். இவ்வளவன் கிள்ளிவளவன் என்று கொள்ளுதல் தகும். இண்டுப் பல்லவர் கொடியாகிய எருது கூறாது, பன்றிக்கொடி கூறியதனால், இவ்வளவன் பன்றிக் கொடி யுடைய சளுக்கியரை வென்று வேங்கட நாடுடையனாதல் துணியப்பட்டதென்க.

     இவ் வளவனையும் இந்நூற் றிரையனையும பாடியவர் ஒரு புலவரேயாதலால் அவர் பெரும்பாணாற்றுப்படை பாடியபோது திரையன் கச்சியுடையனா |யிருந்தா னென்றும், அவர் பின்னே கிள்ளிவளவனைப் பட்டினப் பாலையிற் பாடியபோது தொண்டை நாட்டுத்தலைமை சளுக்கியர் கைய தாயினதை வளவன் வென்றனன்