பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 73 படுவது. இவன் பிறப்பு வரலாறு மகாபாரதம் ஆதி பர்வத்தில் பாரத்வாஜ முனிவர் கங்கையினிரில் "க்ருதாசி" என்னும் அப்லரஸைக் கண்டு மோகிக்க அதனாற் றுரோணர் உண்டானார் என்று தெளியக் கூறுதலான் அறியப்படுவது. இத் துரோணர் கங்கைக்கு வடக்கண்ணும் தெற்கண்ணும் இராஜ்யமுடைய துருபத வேந்தனைத் தன்னால் வில்வித்தை பயில்விக்கப்பெற்ற பீமார்ஜுனரைக் கொண்டு வென்று அவன் கங்கை, வடநாட்டைத் தமதாக்கி 'அஹிச்சத்திரம்” என்னும் நகரிலிருந்து அரசாண்டனர் என்பது அவ் வாதிபர்வத்தே நன்கறியப் பட்டதாகும். (மகாபாரதம் தமிழ் மொழி பெயர்ப்பு. ஆதிபர்வம் 557-ம் பக்கம் பார்க்க).

      இதனாற் கடற் றிரைதரு மரபின் வில் வலியான் மேம் பட்ட துரோணர் பரத்வாஜர்க்குண்டானாரென்றும், அவர் தம் வலியாலும் துணைவலியாலும் கங்கை நதி பாயும் உத்தர பாஞ்சாலத்தை அஹறிச்சத்திர புரத்திலிருந்து அரசு செலுத்தினார் என்றும், அது துருபத.தேயமாகியிருந்து துரோண தேயமாகி மாறிற்றென்றும் நன்கறியலாகும். இத் துரோணனுக்கு மகன் அசுவத்தாமன் ಸr எனப் படுவான். இவன் சிவ னம்சமும் யமன் அம்சமும் பெற்றுப் பிறந்தவன் என்பது மகா பாரதத்திற்கண்டது. இதனால் போர் வன்மையை மிகுத்துக் கூறியதாகும். 'பல்லவர் பட்டயங்களிற் காணப்படும் நந்தியும் கணிச்சியும் ஆகிய இலாஞ்சனைகள் அ சுவத்தாமா உண்டாவதற்குக் காரணமாகிய சிவபிரானுக்கும் யமனுக்கும் உரியனவாம். இயைபு நோக்கிப் பொறிக்கப்பட்டன என்று துணியத் தகும். o
  யமனுக்குக் கணிச்சி யுண்டென்பது,
 'கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை 
   யிரங்குவீர் மாதோ( புறம். 195)   
 என்பதனா லறியலாம். இவ் வசுவத்தாமானின் மகன் பல்லவன் என்பது பல்லவ சாசனங்கள் பலவற்றினும்

ன்