பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சா. இராகவய்யங்கார்

77

 நாடன் எனப் பாடங்கொள்வாரும் உண்டு. சிந்தாமணியுட் பல்லவதேயம் கங்கைக் கரைக்கு மூன்று காத தூரத்துள்ள தென்று பதுமையார் இலம்பகத்துட் கூறினார்.

'படுமழைப் பருவம் பொய்யாப் பலலவதேய
மென்னும் தடமலர்க் குவளைப்பட்டந் தழுவிய
யாணர் நன்னாட் டிடை நெறி"

என்புழி நோக்கிக் கொள்க.

கங்கைக் கரைக்கு இரு காததுாரத்துப் பிசாசபுரம் உள்ளதென்றும், அதற்கு ஒருகாத தூரத்துப் பல்லவதேய முள்ளதென்றும், கூறுதல் கண்டுகொள்க. இது கங்கை வடகரையிலாண்ட துரோணர் வழியினர் பின்னே கங்கையைக் கடந்து தெற்கண் வதிது வாழ்ந்ததைக் குறிப்பது காண்க. இப்பல்லவருள் மூத்தவன் மரபினர் தென்னாட்ட கத்தும், இளையன் மரபினர் துவராபதி, மலையம், யவத்வீபம், முதலியதென்கீழ் நாட்டும் புக்குத்தம்அரசு நிலையிட்டனரென்று நினையலாம். இப்பல்லவருள் இளையவன் மரபினர் மலையநாட்டில் வாழ்ந்த இடம் காடஹம் எனப்படுவது. இதனால் இப்பல்லவர் காடவர் என்று பெயர் பெற்றனராவர்.

தமிழ்நாடு புக்க பல்லவரைக் காடவர்க்கு முனறோன்றல் என்பது நந்திக்கலம்பகத்துட் கண்டது (29). மலைய நாட்டுக் காடவரும் திரைதரு மரபை போற்றுதல் அவ்வரசர் "கெளரவார்ணத்யுதி' (Jasb Letters vol. 1. 1935) என்று தம்மை வழங்கலானறியலாம் பெருநீரிற் றோன்றிய ஒளி என்பது இச் சாசனத் தொடரின் பொருளாம். பெருந் திரையொளி யெனினு மமையும் ஈண்டும் அர்ண்ன சப்தமே வழங்கிக் காட்டுதலால் இவ் வுண்மை நன்குணரலாம்.

இம் மலையநாட்டரசர் பெயருள் கொண்துங்கா' என்பதும் ஒன்றாகும். இதுவும் கடலிற்றோன்றிய துங்கா