பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார் 83 பட்டுள்ளது. (சிந், 850). பல்லவ வேந்தன் "தொண்டைப் பல்லவன்" எனப் படுதல் நச்சினார்க்கினியர் அகத்திணைச் சூத்திர மேற்கோட் பாடலான் அறிய வந்தது. இப் பல்லவர் தமிழ்நாட்டில் இடையிற் புக்கவர் என்பது நந்திக் கலம்பகத்தில்,

 "தங்கோல் வளைத்ததிகழ் சேரர் 
                           சோழர்
  தமிழ் மன்னர் நின்ற நிலைமேல்
  வெங்கோ னிமிர்ந்த வரையுஞ் 
                           சிவந்த
  விறனந்தி"                 (42) என்பதனால் அறியலாம். இதனால் இவர்க்கு இத் தொண்டையர் என்னும் பெயர் தென்னாட்டுப் போந்த பின் உண்டாயிற்றெனத் துணிதற் கில்லையாம்.
 தொண்டைப் பல்லவன் என்பதனாற் பல்லவன் என்னும் பெயர் உண்டாதற்கு முன்னே தொண்டையன் என்னும் பெயர் உண்டாயிருக்க வேண்டுமென்று நினைப்பது உசிதமேயாகும். பல்லவ சாசனங்களின்படி நோக்கின் பல்லவன் என்பவன் துரோணனுக்குப் பேரனாவன். (அமராவதித் தூண் கல்வெட்டு No. 32 பார்க்க)
  துரோணன் துருபதனுடைய கங்கைக்கரையில் உள்ள உத்தரபாஞ்சாலத்தை அஹிச் சத்திரம் என்று பெயரிட்டுத் துரோன தேயமாக்கியது, பாரதம் ஆதிபர்வத்தும், துரோன பர்வத்தும் கண்டது. இத் துரோணர் வழியினர் துரோனஜர் எனப்பட்டு அவரே தொண்டையர் என வழங்கப் பெற்றனர் என்று உய்த்துணரலாகும். இஃது இவர் சாசன வரலாற்றிற் கியைவதேயாம்.  "தொண்டையோன் தொண்டை” என நந்திக் கலம்பகத் திற் றொண்டை மாலையின் வேறாகக் குடிப்பெயராகக் கூறிய தொண்டையன் என்பதற்கும் இஃதியைதல் காண்க.

________________________________ "தோன மந்தைப் பாரத்வாசச் சதுர்வேதி"(s.1.1. 532) என்னுத் தொடரும் இக் கருத்கை வலி யுறுத்தும்.