பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 தமிழகக் குறுநில வேந்தர் சாசனங் கூறுதலானும் இக்குடி, திரைதரு மகளிர் மரபே யாதல் ஐயமறத் துணியலாம்.

   இவற்றாற் பல்லவன் தன் தாய் வழியாலும் தந்தை வழியாலும் திரைமகளிர் மரபினனாதல் உணர்க. இனி இத் திரைதரு மரபினன் அர்ணன், அர்ணி, அர்ணிகன் என்று வழங்கப்படுவர் என்று முன்னரே விளக்கினேன். அர்ண்ண என்பது நீர்க்கும் அலைக்கும் பெயராகும். இத் திரைதரு மரபினர் இப்பெயரானே கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டிலும் இருத்தல் தாலமி என்னும் மேற்றிசை யாத்திரிகர் எழுதிய பூகோள நூலில் அருவர்ணியருடைய ஊராகப் பிதுண்ட் நகரைக் கூறுதலான் உணரலாம்.

அரு அர்ணி என்பது அரு நாட்டினராகிய அர்ண குலத் தவன் என்று பொருளாகும். அருநாடு-அருவன் நாடாம். அரு என்பது நீரட்டையின் பெயரென்பது உரையாசிரியர் "இருநிலந் தீண்டா” (தொல், புறத் 16) என்புழி அரு என்பது நீருட் கிடக்கும் அட்டையெனக் கூறியதனால் அறியப்பட்டது. அருவரன்-நீரட்டைபோல நீரின்வந்த ஆண்மகன் எனவும், அருவாளர் அவ்வட்டைபோல நீரின் வந்த மக்கள் எனவும் கொள்ளலாம். இவ்வருவாளர் இத் தென்னாட்டிற் குடியேற்றப் பட்டவர் என்பது நச்சினார்க்கினியர் கருத்து. அவர் அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் துவாரபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும் பதினெண் குடிவேளிர் உள்ளிட்டாரை யும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கி (தொல். எழுத். பாயிரவுரை) எனக் கூறுதலா னறிக. வேளிர் நெருப்பில் வந்தவரும் அருவாளர் நீரில் வந்தவரும் ஆவர். இப் பிதுண்ட நகரத்தை அவராஜ _________________________________ *அர்வாக் கணவாய் (Aruva Velley) பத்ரிநாதர் கோயிலை அடுத்துள்ளது.