பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

89


“வடக்குடை யானந்தி மானோ தயளிந்த வைய மெல்லாம்
படக்குடை யேந்திய பல்லவன்” (நந்திக். 65)


என வரும் நந்திக்கலம்பகத்தான றியலாம்.

இதன் கண் வையமெல்லாம் படும்படி குடையேந்திய பல்லவன் என்றால் விபரீதப் பொருள் விளைப்பது தெளிக. இதனாற் படக்குடை என்பதற்குப் பாம்பின் பட்த்தையுடைய குடை என்பதே பொருளென்க. புடநாகம் (சிந். 1546) என்பது காண்க. அஹறிச்சத்ரம் என்பது பாம்புக்குடை என்று பொருள் படுதல் அறிக. இக் கருத்திற் கியையவே கலிகன்றியார் பரமேச்சுர விண்ணகரப் பதிகத்துப் “பாம்புடைப் பல்லவர் கோன்” என்றருளிச் செய்தல் கண்டுகொள்க. குடையிற் பாம்புடைய பல்லவர் என்று கொள்க. பாம்பு குடிையாதல் “சென்றாற் குடையாம்............. அணையாந் கிருமாற் கரவு” (இயற்பா. 1,53) என்பதனானுணர்க.

அஹிச்சத்ரகட் சாசனம் ப்ரபாலா என்ற இடத்திற் கிடைத்துள்ளதுங் காண்க. இதனால் இவ் வழியினர் நெடுங்காலம் தம் பெயர் மறவாமல் அரசாண்டது புலனாம். சிந்தாமணியுட் (1185) கங்கைக்கு இரு காத துரத்துப் பல்லவ தேயமுள்ளது கூறியதும் ஈண்டைக்கு ஏற்ப நினைக்க. இப்பல்லவ தேயம் ஜைநர் பணி புராணக்கங் கண்டதாகும்.

இனித் தொண்டையர் என்பது தமிழ்ச் சொல்லே என்று கொள்ளின் இவர் சாசனங்களில் இப்பல்லவரை ஒன்பது கண்டத்தையும் ஆள்பவர் என்று சிறப்பித்தல் (நவகண்ட சாசகர்) கருதி வழங்கப்பட்டதென்க. தொண்டு-ஒன்பது. “தொண்டு தலையிட்ட” என்பது தொல்காப்பியம். தொண்டை நவகண்டம் என்க. தொண்டையர் நவகண்ட நாயகர் எ-று. மகாபாரதத்தில் துரோன பர்வத்தில் பீஷ்மரிறந்த பின் கெளரவர் படையில்