பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

பரப்பில் 100க்கு 222 விழுக்காடு இவை உள்ளன. மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், திரிபுரம், கேரளம், மைசூர் ஆகிய மாநிலங்களிலுள்ள காடுகள் மலைபடு செல்வத்திற்குப் பெயர் பெற்றவை. திரிபுரத்தின் மொத்தப் பரப்பில் 100க்கு 60 பங்கும், அஸ்ஸாமில் 100க்கு 44 பங்கும், காடுகள் உள்ளன. இக் காடுகளினால் கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இந்திய நாட்டுக் காடுகள் போதிய அளவு செல்வ வளத்தைப் பெற்றிருக்கின்றன. உயர்ந்த ரகமான மரங்கள், இவற்றில் நிறையக் கிடைக்கின்றன. நம் நாட்டு இரயில்வே இலாகா, பெரும்பாலும் காட்டு மரங்களையே நம்பி வளர்ந்திருக்கிறது. காகிதம், நூல் சுற்றும் கட்டை (bobin), ஒட்டுப் பலகை {plywood), நெருப்புப் பெட்டி முதலியன தயாரிக்கும் தொழில்களுக்குக் காட்டு மரங்களையே நாட வேண்டியிருக்கிறது. நாட்டு மக்களின் எரி பொருள் (fuel) காடுகளிலிருந்தே பெறப்படுகிறது. தேக்கு, கருங்காலி, சால் தீதர், சிர், சீசம் முதலிய விலையுயர்ந்த பயன்மரங்கள் காடுகளிலிருந்தே பெறப்படுகின்றன. மருந்துகள் செய்யப் பயன்படும் மூலிகைகளுக்கு நாம் காடுகளையே தேடிச் செல்ல வேண்டும்.

நம் நாட்டிலுள்ள காடுகள் அவ்வவ் விடங்களின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பப் பல திறப்பட்டவைகளாக விளங்குகின்றன. மிக்க மழை பெய்யும் இடங்களில் என்றும் பசுமை மாறாத காடுகள் வளரும். நடுத்தரமான மழையுள்ள இடங்களில் உயர்ந்த ரகமான மரங்கள் வளரும். தென்னாட்டுத் தேக்கும், வடநாட்டுச் சால் மரமும் இத்தகைய காடுகளிலேயே விளைகின்றன. மிதமான மழையுள்ள இடங்களில் முள் மரங்களும், செடிகளும் நிறைந்த வறண்ட காடுகள் வளரும்.

நீலகிரி மலைமீதுள்ள காடுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன : (1) பசுமை மாறாக்