பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

கூட்டங் கூட்டமாக வாழ்கின்றன. இவ் வாடுகளின் கொடிய பகை சிறுத்தையே. இவைகளின் கொம்புகள் 171 அங்குலம் வரை வளரும். பார்ப்பதற்கு அழகற்றவை என்றாலும், விலைமதிப்புள்ளவை. ஏனென்றால் இவைகள் எளிதில் கிடைப்பதில்லை. இவ்வாடுகள் திரியும் செங்குத்துப் பாறைகளில் யாரும் காலை ஊன்றக்கூட முடியாது. 1875-ஆம் ஆண்டில் ஒரு வரையாட்டைத் துரத்திச் சென்று சரிவில் விழுந்து இறந்த புச்செர் என்ற வெள்ளையரின் உடல் செயிண்ட். ஸ்டீஃபன் சர்ச்சில் புதைக்கப்பட்டுள்ளது.

காட்டு நாய் :

மற்றக் காடுகளில் இருப்பதைப் போன்றே காட்டு நாய் (wild dog) நீலகிரி மலையிலுள்ள மானினத்திற்குப் பெரும் எதிரியாக உள்ளது. இந் நாய்கள் ஒன்று விட்ட ஆண்டுகளில் நீலகிரிக் காடுகளுக்கு வந்து விட்டுச் செல்லுகின்றன. இவ்வாறு இவைகள் வந்து செல்வதன் காரணம் புரியவில்லை . கி. பி. 1906-ஆம் ஆண்டில் குந்தாக் காடுகளில் இவை நிறைந்திருந்த காரணத்தால் மானினம் அவ்வாண்டில் அருகியே காணப்பட்டது. காட்டில் பரவும் நோய்கள் ஒரு விதத்தில் நன்மையே புரிகின்றன. இந் நாய்கள் எளிதில் நோய்க்குள்ளாகி இறக்கும் தன்மையுடையவை. கி. பி. 1893-ஆம் ஆண்டு சீகூருக்கு அண்மையிலுள்ள காடுகளில் 9 நாய்கள் நோய்க்கு இலக்காகி மெலிந்து இறந்து கிடந்தன. வயநாட்டிலுள்ள நல்ல கோட்டையில் 3 நாய்கள் இறந்து கிடந்தன.

குரங்குகள் :

நீலகிரி மலையில் வாழும் குரங்குகள் பலதிறப்பட்டவை. 'நீலகிரிலங்கர்' என்று பொதுவாகக் கூறப்படும் குரங்கினம், பீடபூமிகளிலும், பசுமரக் காடுகளிலும் நிறையக் காணப்படுகின்றது. இதனுடைய