பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

உணவுப் பயிர்கள் :

நீலகிரி மலைகளின் மீதுள்ள பயிர்த் தொழிலை இரு வகையாகப் பிரிக்கலாம், நீலகிரியில் வாழும் பழங்குடி மக்களால் நடத்தப்பெறும் உணவுத் தானியப் பயிர்த், தொழில் ஒருவகை, ஐரோப்பிய, இந்தியத் தோட்ட முதலாளிகளால் நடத்தப்பெறும் பயிர்த்தொழில் மற்றொரு வகை, இங்கு நடைபெறும் பயிர்தொழில் முழுக்க முழுக்க மழை நீரையும், அருவி நீரையுமே நம்பி நடைபெறுகிறது. கிணறு முதலிய செயற்கைப் பாசன முறைகள் இங்குக் கிடையா.

சமவெளியில் விளைவதைப் போன்று இங்குள்ள பீடபூமிகளிலும் சாமையும், ராகியும் விளைகின்றன. கொரலி (Tiny millet) என்றொரு தானியமும் இங்கு விளைகிறது. இது கோதுமையில் இருபதில் ஒரு பங்கு பருமனே இருக்கும். இதை எல்லாவிதமான நிலங்களிலும் விளைவிக்கலாம். மோசமான வளமற்ற நிலமாக இருந்தால் கூட அவ்விடத்திலும் இது செழித்து வளரும்.

இங்கு அதிகமாக விளையும் கோதுமையானது, சமவெளியில் விளையும் கோதுமையினின்றும் உருவத்தில் மாறுபட்டது. இதன்மேல் நீண்ட வித்துறை போர்த்துக்கொண்டிருக்கும். இடிக்கும் போதுதான் இவ்வுறை தானியத்திலிருந்து பிரியும். இத்தானியத்தைப் பயிர் செய்யும் படகர்கள், இவ்வாறு வித்துறை கோதுமையைப் போர்த்துக்கொண்டிருப்பது சிறப்பு என்று கருதுகிறார்கள். ஏனென்றால் நீலகிரி மலையில் பயிர்களுக்கு மிகவும் சேதம் விளைவிக்கும் பூச்சிகளிடமிருந்து, அது தானியத்தைக் காப்பதாகச் சொல்லுகிறார்கள், மொட்டைக் கோதுமை என்ற வேறொரு தானியமும் இங்கு விளைகிறது. இது ஐரோப்பிய வகையைச் சார்ந்தது. சல்லிவன் என்ற ஐரோப்பியர் இதை முதன் முதலாக நீலகிரியில்