பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

செய்யும் படகர்களுக்கு வழங்கினர்கள். சீமைக் கிழங்கைப் பயிரிடும்போது நல்ல கண்காணிப்பு வேண்டும்; பாத்திகட்ட வேண்டும் ; களை பிடுங்க வேண்டும். பூச்சி புழுக்கள் விழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். படகர்கள் போதிய கவனம் செலுத்தாததால் அப்பயிர் முதலில் சரியாக விளையவில்லை. ஆனல் இப்பொழுது நல்ல முறையில் பயிரிடுகிறார்கள்.

ஓட்ஸ் :

உருளைக் கிழங்கிற்கு அடுத்தாற்போல் ஓட்ஸ் ஒரு சிறந்த பயிர், ஆனால் இங்குக் குறைந்த அளவே விளைகிறது. ஜார்ஜ் ஒக்ஸ் என்ற ஐரோப்பியர், பாட்னா ஆஸ்திரேலியா, நியூசீலந்து முதலிய இடங்களில் இருந்து சிறந்த விதைகளைத் தருவித்து இங்குப் பரப்பினர்.

அமர்நாத்

இங்கு அமர்நாத் என்றாெரு தானியமும் விளைகிறது. இது சிற்றூர்களை அடுத்துள்ள வளமான நிலங்களிலேயே பயிராகிறது. இதைச் சொந்த உபயோகத்திற்கே பயிரிட்டுக் கொள்கின்றனர். விற்பனைக்குப் பயிரிடுவதில்லை. இது கோதுமையில் நாற்பதில் ஒரு பங்கு பருமனுள்ள, சிறிய வெண்மையான தானியம். இதை மாவாக அறைத்து அதிலிருந்து உணவுப் பண்டம் செய்கின்றனர். இதனுடைய இலைகளைக் கூடச் சமைத்து உண்கின்றனர்.

காய் கறிகள்

சீமைக் காய்கறிகள் இங்கு நிறையப் பயிர் செய்யப்படுகின்றன. கேரட், டர்னிப், தக்காளி, பார்சினிப், முட்டைக் கோசு, குவாலிஃ பிளவர், பீட்ரூட், ரேடிசஸ், லெட்டுசெஸ், ருபர்ப், ஃப்ரெஞ்சு அவரை, அகன்ற