பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

கிரிக்கு அனுப்பப்பட்ட செடிகளைக் 'கேதி' சோதனைத் தோட்டத்தில் பயிரிட்டனர். ஆனால் அடுத்த ஆண்டிலேயே இச் சோதனைகள் கைவிடப்பட்டுக் 'கேதி' தோட்டமும் அதிலிருந்த கட்டிடமும் பாண்டிச்சேரி கவர்னருக்கு விற்கப்பட்டன. திருவாளர் எம். பெர்ராடெட் (M. Perrottet) என்ற ஃபிரெஞ்சுத் தாவர ஆராய்ச்சியாளர் அத் தோட்டத்திற்கு வந்திருந்த பொழுது, சோதனைக் குழிகளில் நடப்பட்டிருந்த தேயிலைச் செடிகளைப் பார்த்தார். அச் செடிகள் பாதியளவு பூமிக்குள் புதைத்து நடப்பட்டிருந்தன. இவ்வாறு நடப்பட்டதற்குக் காரணம், தோட்ட வேலைக்காரனின் அறியாமையே என்பதை உணர்ந்து, அவைகளையெல்லாம் பிடுங்கி மறுபடியும் ஏற்ற முறையில் நட்டு வளர்த்தார். 1838-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் அச் செடிகள் நான்கடி உயரத்திற்கு வளர்ந்து, செழிப்பான இலைகளைத் தளிர்த்தன. பூக்களும், காய்களும், பழங்களும் தோன்றின. உடனே இச் செய்தியைப்பற்றி ஒரு கட்டுரை வரைந்து, பத்திரிகையில் வெளியிட்டார். இக் கட்டுரை சென்னை மாநிலத்திலுள்ள எல்லாத் தோட்டக்காரர்களின் கவனத்தையும் கவர்ந்த கி. பி: 1840-ஆம் ஆண்டு திருவாளர் சல்லிவன் கேதி தோட்டத்திலும் பில்லிகல் தோட்டத்திலும் விளைந்த தேயிலையின் மாதிரிகளை, சென்னையிலுள்ள 'பயிர்த் தொழில் வளர்ச்சிக் கழகத்'திற்கு அனுப்பி வைத்தார். அவற்றிலிருந்து இறக்கிய தேநீரைக் குடித்து மகிழ்ந்த அவர்களெல்லாம் அவற்றின் சுவையைப் பாராட்டினர்.

பிறகு கூனூரில் வாழ்ந்த திருவாளர் மான் (Mr. Man) என்ற வெள்ளையர் கி. பி. 1854-இல் சீனாவிலிருந்து உயர்ந்த ரகமான செடிகளை வரவழைத்து, பல இன்னல்களுக்கிடையே அவ்வூருக்கருகிலுள்ள ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டார். இப்போது அவ்விடம். 'கூனூர் தேயிலைத் தோட்டம்' (Coonoor