பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
117

117

Tea Estate) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கி. பி. 1856 இல் மான் அவர்களால் பயிரிடப்பட்ட தேயிலை மிகவும் சிறந்ததென்று இலண்டன் தேயிலை வியாபாரிகளால் பாராட்டப்பட்டது. ஆல்ை தம் விளைச்சலை அதிகப்படுத்த அவர் விரும்பவில்லை. காரணம் பயிரிடும் நிலத்திற்காகக் காடுகளை அழிப்பது அவருக்கு மிகவும் தொல்லையான வேலையாகப்பட்டது.

டாக்டர் க்ளெக் ஹார்ன் (Dr. Cleghorn) என்பவர், தேயிலை பயிரிடுவதில் நல்ல அனுபவமுள்ள சில சீன உழவர்களை வட இந்தியாவிலிருந்து நீலகிரிக்குத் தருவித்து உதவுமாறு சென்னை கவர்னருக்கு வேண்டு கோள் விடுத்தார். ஆனல் அவருடைய வேண்டுகோள் அரசியலாரால் மறுக்கப்பட்டது. பிறகு திரு. ரே (Mr. Rae) என்பார் சோலுருக் கருகில் அரசியலாரிட மிருந்து நிலத்தைப் பெற்றுத் தேயிலைத் தோட்டத்தை நிறுவினர். அது இப்பொழுது டன்சேண்டல் தோட் Lib’ (Dunsandle Estate) stairp QLusmsi) osop, படுகிறது. கோதகிரியில் ஒரு தோட்டமும், உதக மண்டலத்தில் பெல்மாண்ட் (Belmont) என்ற தோட்டமும் ஏற்படுத்தப்பட்டன.

கி. பி. 1863-64 ஆம் ஆண்டுகளில் சென்னை கவர்னராக இருந்த வில்லியம் டென்னிசன் என்பவர் வடமேற்கு மாநிலங்களிலிருந்து தேயிலை பயிரிடுவதில் நல்ல பயிற்சிபெற்ற தோட்ட வேலைக்காரர்களை வரவ ழைத்து நீலகிரிக்கு அனுப்பித் தேயிலைப் பயிர்த் தொழில் வளர்ச்சியில் சிறிது அக்கறை காட்டினர். அதோடு உயர்ந்த விதைகளைத் தருவித்தும் வழங்கினர். கி. பி. 1869 ஆம் ஆண்டு ஏறக்குறைய 300 ஏகர் நிலம் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது. அவ்வாண்டு நடந்த பயிர்த் தொழில் கண்காட்சியில் 18 தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டத்தில் விளைந் திருந்த தேயிலைகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர்.