பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

முன்பு தென்னமெரிக்கச் செவ்விந்தியர்களுக்கு இதன் பயன் தெரியுமா என்பது ஐயப்பாடே. கொய்னா (Quinine) என்ற சொல்லானது செவ்விந்திய மொழிச் சொல்லான க்வினா-க்வினா (Quina-Quina) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். க்வினா என்றால் பட்டை என்று பொருள்.

கி. பி. 1640 இல் 'பெரூ' நாட்டின் அரசப்பிரதிநிதியாக இருந்த ஐரோப்பியரின் மனைவியான சின்கோன் சீமாட்டி (Countess of Chinchon)யும், அவருடைய யூத நண்பர்களுமே சின்கோனா மரம் உலகில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். கி. பி. 1846-க்கு மேல் தான் இம்மரம் ஐரோப்பாவில் பயிரிடப்பட்டது. இதை நம் நாட்டுக்குக் கொண்டுவரப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் திருவாளர் டல்ஹௌசி பிரபு. சின்கோனாச் செடிகளை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக அவர் கி. பி. 1852 இல் ஒரு குழுவைத் தென்னமெரிக்காவிற்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் கொண்டுவந்த சின்கோனாக் கன்றுகள் வரும் வழியிலேயே கருகிவிட்டன. இவ்வாறு பல தடவை எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீணாயின.

சின்கோனா பயிரிடுவதில் பயிற்சி பெற்ற திருவாளர் மார்க்கம் (Mr. Markham) என்பவர் கி. பி. 1860 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் நீலகிரிக்கு வந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்பாக, உதக மண்டலத்திலுள்ள அரசாங்கத் தோட்டத்தின் பாதுகாவலராக இருந்த டப்ள் யூ. ஜி. மெக்கல்வர் (W. G. Mclvor) என்பார் தொட்ட பொட்டாவிற்கருகிலுள்ள பள்ளத்தாக்குகளில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சின் கோனா பயிரிட ஆரம்பித்தார். திரு. மார்க்கம் அவ்விடத்தைப் பார்வையிட்டார். அவ்விடம் ஓரளவு தகுதியானதே என்றாலும், போதிய ஈரமும் வெப்பமும் இல்லை என்று கருதி பீடபூமியின் மேற்கு எல்லை