பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

யிலுள்ள நடுவட்டம் என்னும் இடத்திற்கருகில் சின்கோனா பயிரிடத் தொடங்கினார். பிறகு பல இடங்களில் இத் தோட்டங்கள் தோன்றத் தொடங்கி வளர்ச்சியுற்றன. இப்பொழுது இப்பயிர்த்தொழில் காஃபிக்கு அடுத்தாற்போல் வருவாய் தருவதாக உள்ளது.

இரப்பர் :

காஃபி, தேயிலை போன்று இரப்பர் மிகுந்த வருவாய் அளிப்பதாக நீலகிரியில் இல்லை . கி. பி. 1882-ஆம் ஆண்டு இரப்பர் வயநாட்டிலும் கோதகிரியிலும் முதன் முதலாகப் பயிரிடப்பட்டது. குரங்குகளாலும், பன்றிகளாலும் தோட்டக்காரர்களின் கவனக் குறைவாலும் இரப்பர் பயிர்த்தொழில் அப்பொழுது வெற்றிகரமாக நடைபெறவில்லை. சேர்வராயன் மலையில் இரப்பர் பயிரிடுதலை வெற்றிகரமாகச் செய்து காண்பித்துத் தங்கப்பதக்கம் பெற்ற நிக்கல்சனைப்பற்றி முன்பே கூறினோம். அவர் சேர்வராயன் மலையிலிருந்து இரப்பர் செடிகளைக் கொண்டு வந்து கோதகிரியில் தமக்குச் சொந்தமாயிருந்த கிளென்பர்ன் தோட்டத்தில் பயிரிட்டார், அதன் பிறகு பல தோட்டக்காரர்கள் நீலகிரியில் குறைந்த அளவு இரப்பர் பயிரிடத் தொடங்கினர். கி. பி. 1902-ஆம் ஆண்டு ஏறக்குறைய 1200 ஏகர் நிலங்கள் இரப்பர் தோட்டங்களாக மாறின. தென்னிந்தியாவில் கொச்சி, ஆனைமலை, சேர்வராயன் மலை, பழனிமலை, மலையாளம் முதலிய இடங்களில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. நீலகிரிப் பீடபூமியில் குறிப்பிடத்தக்கது கிளன்ராக் இரப்பர் கம்பனி (glem Rock Rubber Company). இது பண்டலூருக் கருகில் உள்ளது.

பழவகைகள் :

ஐரோப்பியர்கள் நீலகிரியில் குடியேறத் தொடங்கியதும், மேல் நாட்டுப் பழவகைகளை அங்கு நிறையப்