பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

காரணத்தால், இவர்கள் தோடர்களுக்குப்பின் இங்குக் குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது.

படகர்கள் உழவுத் தொழிலில் வல்லவர்கள். நீலகிரியில் உள்ள பயிர்த்தொழில் முழுக்க முழுக்கப் படகர்களின் உழைப்பையே நம்பி நடைபெறுகிறது. நீலகிரியின் கிழக்குப்பாதியில் இவர்கள் நிறைய வாழ்கின்றனர். குந்தா பீட பூமியில், தோட்டக் கூலிகளாக நிறைய பேர் பணிபுரிகின்றனர். சிலர் தங்களுக்குரிமையான நிலங்களில் பயிர்த் தொழில் புரிந்து வாழ்கின்றனர். தோட்டங்களில் உழுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பெண்களே செய்து கொள்கின்றனர். நகரங்களில் கூலிவேலை செய்வதற்காக ஆண்கள் நிறையபேர் வருகின்றனர். படகர்கள் சிலர் கொட்டுக்காரராகவும் (Artisans), தச்சராகவும், நாவிதராகவும், வண்ணாராகவும் தங்கள் இனத்தார்க்குப் பணிபுரிகின்றனர். கொரலியும், சாமையும் இவர்களுடைய முக்கிய உணவுப் பொருள். உணவுப் பொருள் பயிரிட்டது போக எஞ்சிய நிலங்களில் உருளைக்கிழங்கு, குச்சி வள்ளிக்கிழங்கு முதலியவற்றைப் பயிரிட்டு விலைக்கு விற்கின்றனர். இவர்கள் பரம்பரையாகப் பரம ஏழைகள். ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு, இவர்களுடைய வாழ்க்கைத்தரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இவர்கள் இயற்கையிலேயே அஞ்சும் இயல்புடைவர்கள். பேசும் பொழுது மிகவும் பணிவோடும் அடக்கத்தோடும் பேசுகின்றனர். இங்குக் குடியேறிய காலத்திலிருந்து தோடர்களுக்கு அஞ்சி, அவர்களுக்கு அடங்கியவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். இப்பொழுது கூடத் தங்கள் விளைச்சலின் ஒருபகுதியை ஆண்டுதோறும் அவர்கட்கு வழங்கி வருகின்றனர்.

உருவம்

நீலகிரி மலைமேல் சென்றவுடன் எளிதில் படகர்களை அறிந்து கொள்ளலாம். திரும்பிய பக்கமெல்லாம்