பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

வார்கள். அடுத்த உவாநாள் (பெளர்ணமி) வரை அப் பெண் அக்குடிசையிலேயே இருக்கவேண்டும். மற்ற வீட்டுப் பெண்களெல்லாம் நாள்தோறும் அக்குடிசைக்கு மாவு கொண்டு சென்று, உணவு சமைத்து ஒருங்கிருந்து உண்பர். உவா நாளன்று வீட்டுக்கழைக்கும் சடங்கு நடைபெறும். அன்று அப்பெண்ணை நீரில் குளிப்பாட்டுவர். புத்தாடை அணிவித்து வீட்டிற்கு வெளியில் உட்கார வைப்பர். வானத்தில் முழு நிலா தோன்றியதும், ஐந்து பெண்கள் கூடி அப்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்வர். தாய் மகளை வரவேற்று, "நல்ல வீட்டையும், அன்புள்ள கணவனையும் ஆற்றல்மிக்க மகனையும் பெறுவாயாக“ என்று வாழ்த்துவாள். உள்ளே சமைத்து வைக்கப்பட்ட உணவை அப்பெண்ணுக்குப் படைப்பர். அவ்வுணவில் சிறிதளவு உண்டு, மீதியை அண்டை வீடுகளிலுள்ள முதிய பெண்களிடம் எடுத்துச்சென்று வணங்குவாள். அக்கிழவியரும், தாய் முன்பு வாழ்த்தியது போலவே வாழ்த்துவர்.

திருமணம்

படகர்கள் வீட்டில் ஒரு பெண் பிறந்தவுடன், 10 ரூபாய் பரிசமாக வாங்கிக்கொண்டு, யாராவது ஓர் உறவினருக்கு அக்குழந்தையை மருமகளாக விற்று விடுவது வழக்கம். பருவம் எய்தும் வரையிலும் அப் பெண் தாய் வீட்டிலேயே இருப்பாள். பிறகு கணவன் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். சிறிது காலத்துக்கு முன் வரையில் படகர்களிடையே காதல் மணம்தான் பெரு வழக்காக இருந்தது. உடையார் பிரிவினர் மட்டும் காதல் மணத்தை ஆதரிப்பதில்லை. ஓர் இளைஞன் ஒரு பெண்ணை விரும்புகிறானென்றால், உடனே தன் பெற்றாேரின் ஒப்புதலோடு சில பரிசுப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்லுவான். அப்பெண்ணின் பெற்றாே