பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

திருப்பிக் கொடுத்துவிட்டால், எப்பொழுதும் மணவிலக்குப் பெற்றுக்கொள்ளல் எளிது. ஒரு பெண் கருவுற்றவளாக இருந்தால், பஞ்சாயத்தார் முன்னிலையில் ஏழாம் மாதச் சடங்கை (சீமந்தம்) நிகழ்த்திய பிறகே, மணவிலக்கு அளிக்கப்படும். பிறக்கும் குழந்தை கணவனுக்கே உரியது. ஒரு படகர் குலப்பெண் வாழ்க்கையில் திருப்தியும், அமைதியும் கொள்ளும் வரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மணவிலக்குப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் பெண்களின் ஒழுக்கம் சீர்கெடுகிறது என்பது உண்மையே. படகர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் ஒரு பெண் வேறு சாதியினரிடம் தொடர்பு கொண்டால், அச்செயல் மிகவும் இழிந்ததாகவும், பெருங் குற்றத்தின்பாற் பட்டதாகவும் கருதப்படுகிறது. மிகவும் கடுமையாக அப்பெண் தண்டிக்கப்படுகிறாள். சில சமயங்களில் கொலை கூடச் செய்து விடுகின்றனர்.

இறுதிச் சடங்கு :

படகர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை. இறக்கும் தருவாயில் இருப்பவன் வாயில் ‘வீரராயப்பணம்' என்ற சிறிய தங்க நாணயத்தைப் போட்டு நீரூற்றி விழுங்குமாறு செய்வர். இப் பணத்தின் மதிப்பு நான்கணாதான். யாரேனும் ஒரு படகன் இறந்தவுடன் அச்செய்தியை ஒரு தொரியன் மூலமாக அண்டையிலுள்ள சிற்றூர்களுக்குத் தெரியப்படுத்துவர். தொரியன் இச் செய்தியைப் பிறரிடத்தில் கூறும்போது, தலைப்பாகையைக் கழற்றிவிட்டுப் பணிவோடு கூறுவது வழக்கம். பிணத்தைத் திறந்த வெளியில் ஒரு கட்டிலில் கிடத்துவர். எருமை ஒன்றைப் பிணத்தைச்சுற்றி மூன்று முறை வலமாக இழுத்துவருவர். பிறகு பிணத்தின் கையைத் தூக்கி எருமையின் கொம்பின்மேல் வைப்பர். பாடை தேர் போல் அலங்கரிக்கப்படுகிறது. செல்வர்களாக இருந்