பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

செய்யின் எல்லை திருடினான்
இவனே. எளியோர் தம்மையும் ஏழையர் தம்மையும் நலிவே புரிந்து நடுங்கச் செய்தான் ;
அண்டையர் நிலத்தில் மண்டிய பயிரைக்
கண்டதும் உளத்தில் கொண்டனன் பொறாமை ; இறுதிச் சடங்கில் இயற்றிய கன்றைக்
கருதிச் சென்றே கையகம் கொண்டான் ;
மேலோ ரிடத்தில் கோளனாய்ச் சென்றே
பிறர்பழி தூற்றும் பேதையாய் வாழ்ந்தான் ; பாம்பைக் கொன்றான் : பசுவைக் கொன்றான் ;
..................
இப்படி யாக இவன்பவம் நீளும்;
முன்னூறு பாலம் முற்றவே செய்தான் ;
பலியிடப் படுமிக் கன்றின் உயிரோடு
வளியினில் புழுதியாய் இவன்பவம் தொலைக ; கன்றின் காலைக் கையினில் பற்றி
மன்றில் ஆடும் மங்கை பாகன்
நின்றிவ் வுலகம் காக்கும்
நன்றுடை பதியே சென்றிவன் சேர்க!

பாடல் முடிந்ததும் ஓர் எருமைக் கன்றைப் பிணத்தினருகில் நிறுத்திக் கோடரியின் பின்புறத்தால் தாக்கிக் கொல்லுவர். இறந்தவன் செய்த பாவங்களையெல்லாம், பலியிடப்பட்ட அக்கன்று ஏற்றுக் கொள்கிறதாம். இவன் தன் பாவங்களினின்றும் நீங்கிச் சிவனுலகை அடைகின்றானாம், யூதர்களிடம் பண்டைக் காலத்தில் இத்தகைய நம்பிக்கை இருந்ததாக விவிலிய நூல் கூறுகின்றது. யூதர்கள் இறந்தவன் பாவத்தை ஆட்டின் (Scape goat) தலையில் ஏற்றிக் கொன்றனர். நீலகிரி மலையில் வெள்ளையர்கள் குடியேறியதும், இப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர். இப்பழக்கம் இப்பொழுது அநேகமாக இல்லை என்று கூறலாம்.

படகர்கள் பிணத்தை எரிப்பதும் உண்டு ; புதைப்பதும் உண்டு. புதைக்கப்பட்ட பிணத்திற்கே 'பால் தெளித்தல்' என்னும் சடங்கு நடைபெறும், எரிக்கப் பட்ட பிணத்தின் எலும்புகளைப் பொறுக்கி, அவைகளைப்