பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

147

கொள்வதுண்டு. கணவர்களும் இப் பழக்கத்தை அனுமதிக்கின்றனர். ஆகையினால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட காதலர்கள் (recognised lovers) என்று அழைக்கப்படுகிறார்கள்.

பல ஆடவர்கள் சேர்ந்து பல மனைவியரைப் பொதுவாகக் கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் உண்டு. ஒரு குடும்பத்தில் பல சகோதரர்களிருந்தால், அவர்களுடைய மனைவியர், எல்லாருக்கும் உரிமையுடையவர்கள். இப்பழக்கம் பல மனைவி முறையோடு (Polygamy) ஓரளவு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. ஆனால் இப்பொழுது ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு சகோதரனும் தனக்கென ஒருத்தியை மனைவியாக உரிமையாக்கிக் கொள்கிறான். ஆனால் கட்டுப்பாடின்றித் தன் உடன்பிறந்தாரின் மனைவியரிடம் தொடர்புகொள்ள அவனுக்கு உரிமையுண்டு. இச் செயலினால் வரம்பிற்குட்பட்ட மனைவி முறை (Monogamy) ஓரளவு தலைகாட்டுகிறது.

ஒரு பெண்ணுக்குரிய கணவர்களிலோ அல்லது காதலர்களிலோ, யாரேனும் ஒருவன், அப்பெண் இருக்கும் குடிசைக்குள் நுழையும்போது, ஒரு பூவை வாயிலில் செருகிவிட்டுச் செல்வது வழக்கம். அப்பூவைக் காணும் மற்ற கணவன்மாரோ, அல்லது காதலர்களோ அப்போது குடிசைக்குள் நுழையக் கூடாது. மேற் கூறிய பழக்கவழக்கங்களெல்லாம், சமவெளியிலுள்ள மக்கள் தொடர்பால் இப்போது குறைந்துவருகின்றன. ஆனால் முற்றிலும் மறையவில்லை,

திருமணம் :

தார்த்தார், தீவலி என்ற இருபிரிவினர் தோடர்களிடையே உண்டு எனக் கண்டோம். அவர்களிடையே மணத் தொடர்பு கிடையாது. ஆனால் ஓரினப் பெண் மற்றோரினத்தானைக் காதலனாக ஏற்றுக்கொள்ள