பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

லாம். ஒரு பெண் குழந்தை பிறந்ததும், மூன்று அல்லது நான்காவது வயதில், அதைத் தாய்மாமன் மகனுக்கோ, அத்தை மகனுக்கோ , திருமணம் செய்து கொடுப்பது வழக்கம். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு அடிக்கடி பரிசுகள் வழங்குவதன் மூலம் திருமணத்தை உறுதி செய்து கொள்கின்றனர், பெண் 15 அல்லது 16 வயது வரையில் பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். ஒரு பெண் பருவம் அடையும் நிலையில் இருக்கும்போது, வேற்றுக்குலத்தான் ஒருவனை அழைத்து அப்பெண்ணோடு ஓர் இரவு முழுவதும் தனி அறையில் இருக்குமாறு செய்வர். இது 'பருவப் பெண்ணின் கற்பழிப்புச் சடங்கு' {ceremonial defloration of nubile girls) எனப்படும். இச்சடங்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. இச்சடங்கு நடைபெறாமல் ஒருபெண் பருவமெய்துவது, அவமானமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்பழக்கம் இப்பொழுது கைவிடப்பட்டது.

மண விலக்கு :

தோடர்கள் கடைப்பிடித் தொழுகும் மனைவி முறைகளால் மணமுறிவும், மறுமணமும் அடிக்கடி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. மணவிலக்குப் பெற விரும்புவோர் சில எருமைகளை ஒறுப்புக்கட்டணமாகச் (Fine) செலுத்திவிட்டு எளிதில் பெறலாம். ஆகையினால் வேண்டுமென்றே சில ஆடவர்கள், ஆடை மாற்றுவது போல் மனைவியரை மாற்றிக் கொண்டிருக்கின்றனர், ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஐந்து முறைகூட மண விலக்குப் பெறுவதுண்டு.

பிள்ளைப்பேறு :

தோடர் குலப்பெண் கருவுற்ற ஐந்தாவது திங்களில், பல சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்கள் வாழும் ‘மண்டு'விலிருந்து சிறிது தொலைவில்