பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

மறுநாள் காலையில் கடைசி இறுதிச் சடங்கு தொடங்கும், குடிசையிலிருந்து அம் மூட்டையை எடுத்துக்கொண்டு சென்று வட்டமாக அமைக்கப்பட்ட கற்களுக்கு நடுவில் ஒரு குழி தோண்டி, அதில் வைப்பார்கள். அவ்விடத்திற்கு ' 'ஆசாரம்' (Azaram) என்று பெயர். அம் மூட்டையையும், உணவுப் பொருளோடு கூடிய மரத் தட்டையும் வைத்து ஒன்றாக எரிப்பார்கள். பிறகு அச் சாம்பலைக் குழிக்குள்ளேயே வைத்து மூடிவிடுவார்கள். பிறகு மூன்று முறை மணியடிக்கப்படும். புதிய மட்பாண்டமொன்று உடைக்கப்படும். இத்துடன் சாச்சடங்குகள் முடிவுறுகின்றன. சிலர் இச் சடங்குகளைச் சில திங்கள்கள் கழித்துக்கூடச் செய்வதுண்டு.

தோடர்கள் யார்?

இந்திய நாட்டிலேயே மிகவும் கவர்ச்சியூட்டும் பழங்குடியினராகிய இத் தோடர்களின் பழக்க வழக்கங்களைக்கொண்டு, இவர்கள் யாராயிருக்கலாம்? எங்கிருந்து வந்திருக்கலாம் ? என்ற வினாக்களுக்கு விடை காண முயலுகின்றனர். திருவாளர் ரிவெர்ஸ் (Mr. Rivers) என்பார், கேரளத்து மலையாள மக்களின் பண்பாட்டோடு, இவர்கள் பண்பாடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை விளக்கப் பல சான்றுகள் காட்டுகின்றார். ஒரு பெண் பல கணவரை ஏற்றுக்கொள்ளும் முறை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை மலையாளத்தில் நிலவி வந்தது. அம் மண முறை, 'சம்பந்த மண முறை' என்று மலையாள மக்களால் கூறப்பட்டு வந்தது. திருமணத்தின்போது நடக்கும். கூறைச் சடங்கு, இரு இனத்தாரிடையிலும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. திருமணமாகாமல் ஒரு பெண் இறந்துவிட்டால், புதுப்புடவை வைத்து எரித்தலும், மணத்திற்குரிய சடங்குகளைப் பிணத்திற்குச் செய்தலும். இரு இனத்தாரிடையிலேயும் நிலவிவரும்