பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173

வந்தான், செல்வர்களாக இருக்கும் தோடர் வீட்டின் எதிரே சிறிது தொலைவில் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அதன்மேல் தங்கள் கடவுளுக்கு உணவு படைப்பது அவர்கள் வழக்கம்.

திருவாளர் சல்லிவன் முதன் முதலாக நீலகிரி மலைக்கு வந்தபொழுது, பார்த்கையைக் கண்டு பேசினார். பார்த்கை கல் நாட்டப்பட்டிருந்த அவ்விடத்தைக் காட்டி, “ஜெல்லோகோ எ மண்டு" என்று கூறினானாம். “கல் நாட்டப்படிருக்கும் இச் சிற்றூரை நீ வைத்துக் கொள்” என்பது அத்தொடரின் பொருள். 'ஜெல் லோகோ' என்ற தொடர் மொழிச் சொல், தனியாக நிற்கும் ஒரு கல்லையோ, அல்லது கல் நாட்டப்பட்ட சிற்றூரையோ குறிப்பிடும். அச் சொல்லின் தமிழ் மொழி பெயர்ப்பு, ஒற்றைக்கல் மண்டு என்பதாகும். ஒற்றைக்கல் மண்டு என்ற பெயர் ஒத்தைக்கல் மண்டு என மாறி, இப்பொழுது 'உடகமண்ட்' (Ootacamund) என்று வழங்குவதாகக் கூறுகின்றனர்.

வேறு சிலர் இப்பெயரைப் படகர்களோடு தொடர்பு படுத்துகின்றனர், படகர், வடக்கிலுள்ள மைசூர் நாட்டிலிருந்து வந்ததால் வடகர் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதை முன்பே குறிப்பிட்டேன், வடகர் வந்து குடியேறிய அவ்விடம் • வடகமண்டு' என்று தோடர்களால் அழைக்கப்பட்டதாம், பிறகு அப்பெயர் ‘வட்டயாக மண்டு,' ' 'வட்டச மண்டு' எனப் பலவிதமாக மாறி, இப்பொழுது உடகமண்ட் என்று வழங்குவதாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் மற்றொரு காரணமும் கூறுகின்றனர். இக்காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. 'உதகமண்டலம்' என்பதே ஆதியிலிருந்து இவ்வூருக்கு வழங்கும் பெயர் என்பது அக் கொள்கை, உதகமண்டலம் என்றால் படகர் மொழியில் 'எப்போதும் மழை பெய்து கொண்டிருக்குமிடம்' என்பது பொருள்.