பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

வரும் பனிக்கட்டி' என்று பெயர். கி. பி. 1823-ஆம் ஆண்டு, பனிவெள்ளம் இவ்விடத்தில் ஓடிவந்த காரணத் தால் இது இப்பெயர் கொண்டு விளங்குகிறது.

உதகமண்டலத்திலிருந்து இவ்விடத்திற்குப் செல்லும் வழி மிகவும் மோசமானது. ஆனால் இப்பாதையின் வளைவுகளில் செறிந்து தோன்றும் இயற்கை வளம், காண்போர் உள்ளத்தை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும். இவ்வழியில் பல சிற்றூர்கள் அமைந்துள்ளன. அச்சிற்றூர்களைக் கடந்ததும் வழி இரண்டாகப் பிரிந்து செல்கிறது. ஒருவழி எமரால்டு பள்ளத்தாக்கி (Emerald Valley)ற்குச் செல்லுகிறது. அப்பள்ளத்தாக்கில் இராணுவத்தினர் தங்கி, மாதிரிப் போர் (Mock battle) பயிலுகின்றனர். மற்றோர் வழியில் ஐந்து கல் சென்றால் அவலஞ்சியை அடையலாம். உதகமண்டலத்திலிருந்து 14 ஆவது கல்லில் அவலஞ்சி ஆறு ஓடுகிறது. இயற்கைவளம் செறிந்த அச்சரிவில், பளிங்கு போல் சுழித்து ஓடும் அவ்வாற்றின் அழகைச் சொற்களால் கூறமுடியாது. அவ்விடத்தில் அமைந்திருக்கும் பிரயாணிகளின் தங்கல் மனை (Travellers' Bangalow)யிலிருந்து ஒரு சிறிய வழி மேலே செல்லுகிறது. அவ்வழியாக மேலேறி நோக்கினால் ஒரே அளவான உயரத்தோடு 8300 அடி நிமிர்ந்து நிற்கும் சிகரங்களைக் காணலாம்.

மீன் பண்ணை :

பிரயாணிகள் தங்கல் மனையிலிருந்து ஒருகல் தொலைவில் ஒரு பெரிய மீன் பண்ணை (Trout Hatchery) அமைந்துள்ளது. இத்தகைய பண்ணை நீலகிரியின் மீது எங்கும் கிடையாது. 'இங்கு வளர்க்கப்படும்படியான மீனின் பெயர் 'டிரவுட்' எனப்படும். இது 'சால் மன்' (Salmon) என்ற மீனினத்தைச் சார்ந்தது. ஆனால், அதைவிட உருவத்தில் சிறியது. இப்பண்ணையில் ஐந்து பெரிய குளங்களில் ஓராண்டிலிருந்து மூன்