பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

றாண்டுவரை வயதுடைய மீன்கள் வளர்க்கப்படுகின்றன. நவம்பர் முதல் ஃபெப்ருவரி வரையிலும் உள்ள காலமே இம்மீனின் வளர்ச்சிக்கு ஏற்ற பருவமாகும். 10,000 மீன்கள் இப்பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இம்மீனின் முட்டைகள் 29 நாட்களில் கண் விழிக்கின்றன,

பிற இடங்கள் :

இப்பண்ணைக் கருகிலுள்ள காடு உள் நுழைந்து காண்பதற்கு ஏற்றது. அழகிய ஒரு சிறுபாதை காட்டின் உட்பகுதியில் செல்லுகிறது. அப்பாதையில் 9 கல் தொலைவு சென்றால் காட்டிலாகாத் தலைவரின் மாளிகை உள்ளது. அவ்விடத்திற்குப் பண்டகபல் (Bantakapal) என்று பெயர்.

உதகமண்டலத்திலிருந்து அவலஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ள மூக்கறுத்தி, பைக்காரா சிகரங்கள் குறிப்பிடத்தக்கவை. உதகை சென்றுவிட்டு இவ்விரண்டையும் காணாமல் யாரும் வரமாட்டார்கள். இச்சிகரங்கள் அமைந்துள்ள இடங்களில் பல ஆறுகளும், அணைகளும், ஏரிகளும் பேரழகுடன் காட்சி அளிக்கின்றன.

உதகமண்டலத்திலிருந்து பதினோராவது கல்லில் அமைந்துள்ள பைக்காரா ஆற்றின் பாலத்தைக் கடந்து சென்றோமானால், ஓர் அணை கட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். இவ்வணை பைக்காரா அணைக்கட்டின் தொடர்ச்சி. இதன் உயரம் 150 அடி.

இவ்வழியிலேயே மேலும் ஐந்து கல்சென்று இடது புறமாகத் திரும்பினால் ஓர் அழகிய பாதை செல்லுகிறது. அவ்வழியின் ஒவ்வொரு திருப்பத்திலும் சலசலத்து ஓடும் நீரருவியையோ, பசுங் குன்றையே. அல்லது சிறு சிறு குடிசைகளையோ காணலாம். க்கப்