பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

187

அழகிய இடம் ஒன்றுள்ளது. அவ்விடத்திலிருந்து மேகமூட்டமற்ற நாளில் நோக்கினால், மைசூர் நகரம் நன்றாகத் தெரியும். கன்னமராப் பாதையின் முடிவில் செங்குத்தான சீகூர் மலை (Sigur ghat) தொடங்குகிறது. அத்தொடர் 3000 அடிக்குக் கீழ் அடர்ந்த காடுகளிடையே அமைந்திருக்கும் கால்கட்டி நீர் வீழ்ச்சி (Kalhatty falls) வரை செல்லுகிறது.

அரசியலார் பயிர்த் தோட்டம் :

உதகமண்டலத்தில் அமைந்துள்ள அரசாங்கப் பயிர்த் தோட்டம் (The Botanical Gardens), இந் நகர வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கி. பி. 1850 ஆம் ஆண்டு திருவாளர் மக்கல்வர் (Mr. Mclver} என்பவரால் இப்பயிர்த் தோட்டம் நிறுவப்பட்டது. முதலில் இது 'கியூ தோட்டம்' (Kew Gardens) என்ற பெயர் கொண்டு விளங்கியது. கி.பி. 1950-ஆம் ஆண்டு இத் தோட்டத்தின் நூற்றாண்டு விழா மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. முதன் முதலாக இது காய்கறி பயிரிடுவதற்காக நிறுவப்பட்டது. ஆனால் இது இப்பொழுது தாவரப்பயிர் ஆராய்ச்சிக்குரிய இடமாக விளங்குகிறது. இங்குத் தாவர ஆராய்ச்சிக் கழகம் (Harticultural Society) கி. பி. 1847-ஆம் ஆண்டு பொது மக்களின் நன்கொடையைக் கொண்டு துவக்கப்பட்டது. கி. பி. 1855-ஆம் ஆண்டு இத்தோட்டம் அரசியலார் கைக்கு மாறியது. பிறகு இது பலவித மாறுதல்களையும், வியக்கத்தக்க முன்னேற்றங்களையும் மேற்கொண்டது. தற்போது இது பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. பயனுள்ள செடிகளும், பலவித மலர்ச் செடிகளும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொணரப்பட்டு இங்குப் பயிரிடப்படுகின்றன. இப்போது ஏறக்குறைய 650 வகையான செடி கொடிகளும், மரங்களும் இங்கு உள்ளன. அழகுக்காகவே வளர்க்கப்