பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

குழந்தைகள் பயிலும் பள்ளியாகவே இது இருந்துவந்தது. அவ்வாண்டு இந்திய அரசியலார் இப்பள்ளியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், எல்லாருடைய குழந்தைகளும் பயிலும் பொதுப்பள்ளியாக இது மாற்றப்பட்டுவிட்டது.

கி. பி. 1949-க்கு முன் ஆங்கிலேயருக்கே ஏகபோக உரிமை பெற்றிருந்த இப்பள்ளி, இப்போது இந்திய நாட்டுச் செல்வர்களுக்கே உரிமையுடையதாக இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் ஈடன் {Eton) என்ற இடத்தில் உள்ள பள்ளி, அரசிளங்குமரர்களும், பிரபுக்களின் குழந்தைகளும், மாபெரும் ஆலை முதலாளிகளின் மக்களும் பயிலும் பள்ளியாக விளங்குகிறது. அப்பள்ளி, வரலாற்றுப் புகழ்பெற்றது ; பல நூற்றாண்டு வளர்ச்சியுடையது; பல அறிஞர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கியது; பல இலக்கிய ஆசிரியர்களால் எடுத்துக் கையாளப்பட்டது. அத்தகைய ஒரு பள்ளி இந்திய நாட்டில் இருக்கிற தென்றால், அது லாரென்ஸ் பள்ளியாகத்தான் இருக்க முடியும். 'இந்திய நாட்டின் ஈடன்' என்று இதை அழைத்தாலும் தகும். ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ. 4000 இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் செலவாகின்றன. இப்பள்ளியில் இடம் பிடிப்பதென்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல. மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் இப்பள்ளியின் செயற்குழு (The Board of Administration) விற்கே உரியது. இந்திய நாட்டுக் கல்வித் துறைச் செயலாளரே (The Secretary to the Government of India, Ministry of Education) இச் செயற்குழுவின் தலைவர். இப்பள்ளி அமைந்திருக்கும் இடத்தின் மொத்தப் பரப்பு 700 ஏகர். இது அமைந்திருக்கும் இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7200 அடி. இப்பள்ளியின் நடுவில் அழகிய ஏரி ஒன்றும் அமைந்துள்ளது.