பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

பத்து வயதிற்குட்பட்ட மாணவர்களின் பிறந்த நாள் விருந்தும் இங்கு நடத்தப்படுகிறது. யாராவது ஒரு மாணவனின் பெற்றோர் தம் குழந்தையின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட விரும்பினால், பிறந்த நாள் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்குமுன் ஒரு விண்ணப்பத்தோடு ரூ. 10-ம் அனுப்பி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது பெற்றோருக்கு முடங்கல் எழுத வேண்டுமென்பது பள்ளியின் சட்டம், முடங்கல் எழுத முடியாத துவக்கப்பள்ளி மாணவர்களுக்காக வகுப்பு ஆசிரியர்களே இரண்டு வாரங்களுக்கொரு முறை எழுதுகின்றனர். முடங்கல் தவறிவிட்டால், அதைப் பற்றிய செய்தியைப் பெற்றோர்கள் பள்ளி . நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பள்ளியில் அணிவதற்கென்று தனிப்பட்ட உடை (Uniform) எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படுகிறது.

அழகுக் கலைகளான ஓவியம், சிற்பம், ஆடல் முதலியனவும் இங்குச் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சிறந்த படைப் பயிற்சியும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகின்றள.

கிருத்தவக் கோயில்கள் :

உதகமண்டலத்தில் சிறந்த மூன்று கிருத்தவக் கோயில்கள் உள்ளன. புனித ஸ்டீஃபன் திருக்கோயில் (St. Stephen's Church), புனித தாமசு கோயில் (St. Thomas Church), கண்டல் உரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் (The Tiny Church of Kandal) என்பவையே அவை. புனித ஸ்டீஃபன் திருக்கோயில் கி. பி. 1830-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக் கோயிலின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மரத்தினால் செய்யப்பட்ட வளைவுகள் கண்ணையும் கருத்தையும் கவரும் கலைவனப்புடையவை. இவை திப்பு சுல்தான் மாளிகையிலிருந்து கொணரப்

கு.வ.-13