பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

கூனூர் :

நீலகிரி மலைக்கு வரும் பிரயாணிகளில் பெரும்பாலோர் இரவில் தங்குவதற்கு உதகையைவிடக் கூனூரையே ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இது மிதமான குளிரையுடைய இடமாகும். இவ்வூர் அமைந்திருக்கும் இடம் கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயர முள்ளது. உதகமண்டலத்திலிருந்து 12 கல் சென்றால் இவ்வூரை அடையலாம். இவ்வழியானது கெய்டி (Kaity) பள்ளத்தாக்கில் புகுந்து செல்கிறது. அழகு கொலுவீற்றிருக்கும் இப்பள்ளத்தாக்கில் அனாதை விடுதி யொன்றும் அமைந்துள்ளது. இவ்வழிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள அரவங்காட்டில் படைக்கலத் தொழிற்சாலை (Cordite factory) ஒன்று அமைந்துள்ளது. இது கி. பி. 1904-ஆம் ஆண்டு அரசியலாரால் இங்கு நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலை ஆறு பிரிவுகளைக் கொண்டது. இதைக் காண விரும்புவோர், இந்தியப் படைத் துறைச் செயலாள (The secretary, Ministry of Defence)ரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

வெல்லிங்டன் :

அரவங்காட்டிலிருந்து மூன்று கல் தொலைவு வந்தால் 'வெல்லிங்டன்' என்ற படையினர் வாழ்விடத்தைக் (Military town) காணலாம். படையினர் தங்குவதற்கென்று அமைக்கப்பட்ட இல்லங்கள் வரிசை வரிசையாக அமைந்துள்ளன. கி. பி. 1852-ஆம் ஆண்டு இங்குப் பாடி வீடுகள் அமைக்கப் பெறுவுதற்கு முன் இவ்விடம் 'ஜேக்டலா' (Jacktala) என்று அழைக்கப்பட்டது. இங்கு அழகிய பொழுது போக்கு மன்றம் (Club} ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள மட்டைப் பந்தாட்ட (Tennis courts) மைதானங்களில் இராணுவ அதிகாரிகளும், அவர் தம் மனைவியருமே விளையாடு