பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

கின்றனர். வெல்லிங்டனுக்குள் எல்லாரும் அனுமதிக்கப்படுவதில்லை, உறவினர்களோ, நண்பர்களோ இருந்தால் அங்குச் சென்று இன்பமாகப் பொழுதைக் கழிக்கமுடியும். ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும், இங்குள்ள மன்றங்களில் மேலை நாட்டு நடனங்கள் நடைபெறுகின்றன, ஆடவரும் பெண்டிரும் இணைந்து இன்னிசைக் கேற்ப ஆடும் அக்களியாட்டம் காண்டற்கினியது.

கானிங் சீமாட்டியின் இருக்கை :

கி. பி. 1857-ஆம் ஆண்டு வடஇந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது, இந்திய நாட்டு அரசப் பிரதிநிதியாக வீற்றிருந்த கானிங் பிரபுவின் மனைவியார் தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். அப்பொழுது சென்னை, பெங்களூர், நீலகிரி ஆகிய இடங்களில் சிறிது காலம் தங்கினார்கள். சீகூர் மலைத்தொடரின் வழியாக நீலகிரியை அடைந்தார்கள். ஊட்டியிலிருந்து புறப்பட்டு 1858-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7-ஆம் நாள் கூனூரை அடைந்தார்கள். சீமாட்டியும் அவரோடுவந்த பிரயாணக் குழுவினரும் ஒரு மாளிகையில் தங்கினார்கள். அம்மாளிகை இன்று கிளன்வியூ ஹோட்டல் (Glenview Hotel) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. அதே மாளிகையில் தான் கானிங்கிற்கு முன் அரசப் பிரதிநிதியாக இருந்த டல்ஹௌசிபிரபு 1855-ஆம் ஆண்டு மே முதல் ஆகஸ்டு வரை தங்கியிருந்தார்.

கூனூரிலிருந்து 6 கல் தொலைவில் கானிங் சீமாட்டியின் இருக்கை {Lady Cannig's seat) அமைந் துள்ளது. இவ்விடம் இவ்வம்மையாருக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுகிறார்கள். நாள்தோறும் இவ்விடத்திற்குச் சென்று அவர் அமர்ந்திருப்பாராம். 'இரண்டு உத்தமர்' (Two Noble Lives) என்ற ஆங்கிலப் புதினத்தில் (Novel), இவ்வம்மையார்