பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

னார். இந்தியாவில் தாம் வாழ்ந்த இறுதி நாட்களைக் கூனூரிலேயே கழித்தார். அப்போது இப்பூங்காவை அமைத்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்.

பாஸ்டர் நிறுவனம் :

கூனூரில் குறிப்பிடத்தக்க ஒன்று பாஸ்டர் நிறுவனம் (Pasteur Institute) ஆகும். லூயி பாஸ்டரை அறியாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. விஞ்ஞான உலகில் அவருடைய ஆராய்ச்சிகள் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்தன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அவர் ஆய்ந்து வெளியிட்ட கிருமியாராய்ச்சி (Bacteriology)க் கொள்கைகள் மருத்துவத் துறைக்குப் பெரும் பயன் விளைத்தன. எனவே, உலகின் பல பகுதியிலும் கிருமியாராய்ச்சிக் கழகங்கள் தோன்றின. இந்தியாவிலும் பல கழகங்கள் தோன்றின. ஆக்ரா கழகம் 1892-லும், பம்பாயி லுள்ள ஆஃப்கின் கழகம் (Haffkine Institute) 1896-லும், கசௌலியிலுள்ள பாஸ்டர் கழகம் 1900-லும், சென்னை அரசர் ஆராய்ச்சிக் கழகம் (King Institute) 1903-லும், கசௌலி நடுவண் ஆராய்ச்சிக் கழகம் (Central Research Institute) 1906-லும், நிறுவப்பட்டன. 1902-ஆம் ஆண்டு வெறி நாய்க் கடியினால் தாக்குண்ட ஆங்கிலச் சிறுமியை, கசௌலிக்குக் கொண்டு செல்லக் கால தாமதம் ஏற்பட்டதால், அப் பெண் இறந்துவிட்டாள். இச் செய்தி தென்னிந்தியாவிலிருந்த ஆங்கில அதிகாரிகளின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் விளைவாகவே கூனூரிலுள்ள பாஸ்டர் நிறுவனம் 1907-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25-ஆம் நாள் (வியாழக்கிழமை) ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் வாழ்ந்த திருவாளர் ஹென்றி ஃபிப்ஸ் (Mr. Henry Phipps) என்ற கோடீசுவரர், இந்திய நாட்டின் மருத்துவத்துறை முன்னேற்றத்திற்