பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

mon Hills) அமைந்துள்ளது. அம் மலையின் கிழக்கே கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பழனி மலையின் நீளம் 40 கல், அகலம் 25 கல், இது கிழக்குப் பகுதி என்றும், மேற்குப் பகுதி என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளை மேற்பழனி என்றும் கீழ்ப்பழனி என்றும் குறிப்பிடுவர். கீழ்ப்பழனி மலையில் 3000 அடியிலிருந்து 5000 அடிவரை உயரமுள்ள பல சிகரங்கள் சிதறிக் கிடக்கின்றன. இச் சிகரங்களிடையே குறுகிய பல பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. அழகின் இருப்பிடமாக விளங்கும் இப்பள்ளத்தாக்குகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல குக்கிராமங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதும், பெரியதும் 'பண்ணைக்காடு' என்ற சிற்றூராம். இதில் 4000 மக்கள் வாழ்கின்றனர். இச் சிற்றூர்களைச் சுற்றி மா, பலா, புளியன், ஆரஞ்சு, எலுமிச்சை, சீதளை (இது ஒருவகைப் பேரெலுமிச்சை, கடாரங்காய் என்றும் கூறுவர். Citron) முதலிய மரங்களடர்ந்த சோலைகள் கண்கவரும் வனப்போடு விளங்கும். இங்கு வாழும் மக்களைப் 'பழங்குடி மக்கள்' (Hill tribes) என்று கூறுவதற்கில்லை. இவர்களெல்லாம் கோவை, மதுரை மாவட்டங்களிலுள்ள சமவெளிகளிலிருந்து பண்டை நாட்களில் இங்குக் குடியேறியவர்களே, இவர்கள் தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும், அங்க அமைப்பிலும் சமவெளியில் வாழும் மக்களிலிருந்து வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. இங்கு வாழும் 'குன்னுவர்' (Kunnuvans) என்ற குலத்தாரே பெரும்பாலும் நிலக்கிழார்களாக உள்ளனர். இங்கு வாழும் ‘புலையர்' என்னும் இனத்தார் இவர்களுக்குப் பணிபுரிந்து வாழ்கின்றனர். இங்கு வாழும் தெலுங்குச் செட்டிமார்களும், இசுலாமியர்களும் குன்னுவர்களின் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். இவ்விரு இனத்தாரும் ஓரளவு பணம் படைத்தவர்கள், குன்னுவருக்கும், புலையருக்கும்