பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

வற்ற மரங்களை வெட்டியும், தீயிட்டுப் பொசுக்கியும் பாழ்படுத்தி விட்டனர். இவ்வாறு அழிக்கப்பட்டன போக மிகவும் குறைவான மரங்களே இங்குக் காணப்படுகின்றன. சரிவிலுள்ள காடுகளில் குறிப்பிடத்தக்கவை, பழனிமலையின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆயக்குடி, கன்னிவாடி எஸ்டேட்டுகளுக்கு இடையிலுள்ள காடுகளே. மற்ற இடங்களைப் போலல்லாமல் இவ்விடத்தில் நிலம் வளமுள்ளதாக உள்ளது. வட மேற்கு மூலையில், கூகல் ஷோலாவிலிருந்து அமராவதி ஆறுவரையிலும் உள்ள சரிவு எளிதில் அடைதற்கரியது. ஆகையினால் அச்சரிவுகளிலுள்ள காடுகள் அழிவுறாமல் இருக்கின்றன. பெரிய குளத்திற்கு மேற்கில் அமைந்துள்ள அக்கமலைத்தொடரில் உள்ள காட்டு மரங்கள் வெட்டப்பட்டும், தீயிடப்பட்டும், பயிர்த் தொழிலுக்காக அழிக்கப்பட்டும் கேடுற்றன. ஆனால் இப்பொழுது அரசியலார் தலையீட்டால் அக்காடுகள் புத்துயிர் பெற்றுள்ளன, அழிக்கப்பட்ட காடுகளில் உயர்ந்த ரக மரங்கள், பிறகு நல்ல முறையில் வளர்வ தில்லை. முட்பு தர்களும், பயனற்ற சிறு மரங்களுமே வளர்கின்றன. பழனிமலைச் சரிவுகளில் பொதுவாக வேங்கை, வெக்கலி, வென் தேவதாரு, செந்தேவதாரு, தேக்கு, கருங்காலி, கால்நட் முதலிய மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

கீழ்ப் பழனி, மேற் பழனிப் பீடபூமிகளிலுள்ள காடுகளில் வளரும் மரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. கீழ்ப்பழனிப் பீடபூமிகளிலுள்ள காடுகள் வாழையும், காஃபியும் பயிரிடுவதற்காகப் பெரும் அளவு அழிக்கப்பட்டன. ஏலமும் அங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றது. இவ்விடத்தில் அமைந்துள்ள பள்ளத் தாக்குகளில் படிந்திருக்கும் கருமண் வளமானது; மணலும் களியும் கலந்தது. இங்கு வளர்ந்திருக்கும் இளமரக்காடுகள் அழிவுறாமல் செழிப்புற்று விளங்கு கின்றன. செந்தேவதாரு மரங்களும், கால் நட் மரங்