பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211

களும், வைடெக்ஸ், ஆல்டீசிமா முதலிய மரங்களும் இங்கு செழித்து வளர்கின்றன. செந்தேவதாரு மரங்களும், வைடெக்ஸ், ஆல்டீசிமா மரங்களும் பெட்டிகள் செய்வதற்கும் சட்டங்கள் அறுப்பதற்கும் பெரிதும் பயன்படுகின்றன,

மேற்கிலுள்ள மேற்பழனிப் பீடபூமி சிறிது சிறிதாக உயர்ந்து செல்லத் தொடங்கியதும் அங்குள்ள மண், வளம் அற்றதாக மாறுகிறது. தாண்டிக் குடிக்கும் பண்ணைக்காட்டிற்கும் இடையிலுள்ள தாழ்ந்த மலைப்பகுதியைத் தாண்டியதும், மரம் செடி கொடிகளெல்லாம் வளர்ச்சியில் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றுகின்றன. அடர்ந்த காடுகள் அங்குக் கிடையா. எங்குப் பார்த்தாலும் புல்வெளிகளும், முட்புதர்களும், குட்டையான மரங்களுமே தென்படுகின்றன. அங்குள்ள ஈரமான பள்ளத்தாக்குகளில் மட்டும் ஓரிரு இளமரக்காடுகள் தென்படுகின்றன. பத்துப் பன்னிரண்டு காடுகளே ஓரளவு பெரியவை. புலிக் காடு (Tiger Shola), பெருமாள் காடு (Perumal Shola) வஞ்சக்கானல், கோடைக்கானல், குண்டன் காடு (Kundan Shola} கூகல் காடு {Kukal Shola) என்பவை குறிப்பிடத்தக்கவை. கோடைக்கானலிலிருந்து நான்கு கல் மேற்கிலுள்ள டாக்டர்ஸ் டிலைட் (Doctor's delight) என்னும் இளமரக்காடு, வனபோசனம் உண்போருக்கு மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது. இங்கு வளரும்படியான சிறு மரங்கள் விட்டங்கள் அறுப்பதற்கோ, பலகைகள் அறுப்பதற்கோ பயன்படாதவை, இங்கு பல நீர் அருவிகள் தோன்றுவதற்குரிய ஈரத்தைப் பாதுகாப்பதற்கே இம்மரங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இங்குள்ள காடுகள் முன்பு பெரிதும் அழிக்கப்பட்டன. மேற்பழனி மலையின் உச்சியில் உள்ள இப்பீடபூமி கோடைக்கானல் எல்லையிலிருந்து தொடங்கி மேற்கில் திருவாங்கூர் எல்லை வரையிலும், தெற்கில் போடிநாயக்கனூர் வரையிலும் பரவியுள்