பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

213

கோடைக்கானலின் எரிபொருள் தேவையை அந்நகருக்கு மேற்கில் 2 கல் தொலைவிலுள்ள குண்டன் காட்டிலுள்ள மரங்களே பூர்த்தி செய்கின்றன. இக்காட்டில் 1887-88ஆம் ஆண்டுகளில் நிறைய மரங்கள் பயிரிடப்பட்டன. 1895ஆம் ஆண்டிலும், 1905 ஆம் ஆண்டிலும், குண்டன் காட்டின் பெரும்பகுதி தீயினால் அழிவுற்றது.

விலங்குகள் :

பழனி மலையின் எல்லாப் பகுதிகளிலும் யானைகள் முன்பு நிறையத் திரிந்தன, கிழக்கிலுள்ள கன்னிவாடி வரையிலும் கூட அவைகள் வந்து பயிர்களுக்கு மிகவும் சேதம் விளைவித்தன. இவற்றால் ஏற்படும் அழிவைத் தடுக்க அரசியலார் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். ஜெர்விஸ் என்ற ஒரு வெள்ளையர், தாம் எழுதியுள்ள, காவிரியின் நீர் வீழ்ச்சிகளை நோக்கிச் சென்ற பயணத்தின் வருணனை' (Narrative of a journey to the falls of Cauvery) என்ற நூலில் பழனிமலையில் திரியும் யானைகளைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். கம்பம் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள மலைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கணவாய்களின் வழியாக அவைகள் வருகின்றனவாம், பொய்க் குழிகள் அமைத்து, இக்கணவாய்களில் எளிதாக இவற்றைப் பிடிக்கின்றனராம். இக்கணவாய் ஓரிடத்தில் மிகவும் குறுகிச் செல்லுகிறதாம். அக்குறுகலான இடத்தில் ஒரு யானை தான் நுழைய முடியும். அவ்விடத்திற்கு அப்பாலுள்ள அகன்ற கணவாயில் வரிசை வரிசையான பல குழிகளை வெட்டி வைப்பார்கள். யானைக் கூட்டத்தை அக்குறுகிய வழியின் மூலமாக விரட்டினால், மிக விரைவில் அவ் யானைகள் குழிகளில் விழுந்துவிடும். ஒரு தடவை நான்குமணி நேரத்தில், 63 யானைகள் இம்முறையில் கைப்பற்றப்பட்டனவாம். மேற்பழனியிலும், சரிவுகளி