பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஏரிமலைத் தொடர் உள்ளது. பச்சைமலைப் பீடபூமியிலிருந்து பார்ப்போருக்கு வாணியாற்றின் பள்ளத்தாக்கும், ஹாதார்ன் சிகரம் (Hawthorne cliff—4,899') தேன் சிகரம் (Honey Rocks 4,533) முதலிய அழகிய உச்சிகளும் தென்படும். தேன் சிகரத்திற்கு எதிரில் ஒருகல் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2,490' உயரத்தில் வாணியாறு இழிந்து செல்கிறது.

ஆறுகள்

சேர்வராயன் மலைகளின் தென் சரிவு மிகவும் செங்குத்தாக உயர்ந்திருப்பதால் இங்கு ஆறுகள் ஏற்படுவற்கு வாய்ப்பில்லை. ஆகையால் வடசரிவிலேயே பல சிற்றாறுகள் தோன்றி ஓடுகின்றன. இச் சிற்றாறுகளில் எப்பொழுதும் நீர் இருப்பதில்லை. மழைக்காலங்களில்தான் நீர்ப் பெருக்கைக் காண முடியும் (1) தொப்பூர் ஆறு (2) சரபங்க நதி (3) வாணியாறு என்பவையே இம்மலைகளில் தோன்றுகின்றன.

தொப்பூர் ஆறு : தொப்பூர் ஆற்றிற்கு வேப்பாடி ஆறு என்ற வேறு பெயரும் உண்டு. இது சேர்வராயன் மலைகளில் முலுவி என்ற இடத்தில் தோன்றி வடகிழக்கு நோக்கி மல்லாபுரம் மலைப்பாதை செல்லும் வழியாக ஓடுகின்றது. இதன் பள்ளத்தாக்கில் வேப்பாடி என்ற சிற்றூர் உள்ளது. அவ்வூரின் பெயரை இவ்வாறு ஏற்றுக் கொண்டது. மல்லாபுரத்திற்கு அருகில் இவ்வாறு மேற்கு நோக்கித் திரும்பி ஓடி, சோழப்பாடி என்ற இடத்தில் காவிரியோடு கலக்கிறது.

சரபங்க நதி : சரபங்கர் என்ற ஒரு முனிவர் தாம் செய்த தீவினைக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இதன் கரையிலிருந்து தவமியற்றிய காரணத்தால் இந்த ஆறு இப்பெயர் பெற்றது என்பர். ஓமலூரில் இரண்டு ஓடைகள் ஒன்று சேர்ந்து இந்நதி உருவாகிறது. அவ்