பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

லும் புலி, சிவிங்கிப் புலி, கரடி, காட்டெருமை, மான், வரையாடு, காட்டுப்பன்றி, செந்நாய் முதலியன வாழ்கின்றன. கோடைக்கானலில் காக்கைகளைக் காண முடியாது.

பயிர் வகைகள் :

கீழ்ப்பழனிப் பீடபூமிகளில் வாழும் குன்னுவர்களும் புலையர்களும் புன்செய்ப் பயிர்களைப் பயிரிடுவதோடு, வாழை மரங்களையும் நிறையப் பயிரிடுகின்றனர். இங்குப் பயிராகும் வாழைப்பழம் மிக்க சுவையும் மணமுமுள்ளது. கோடைக்கானல் வட்டத்தில் வேறெங்கும் இவ்வளவு உயர்ந்த ரக வாழை பயிராவதில்லை. இங்குப் பயிரிடப்படும் வாழை மரங்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும் தன்மையுடையவை. இங்கு, நெல், காஃபி, ஏலம், இஞ்சி, மஞ்சள் முதலியனவும் நல்ல முறையில் பயிரிடப்படுகின்றன. இங்கு அரேபிகா என்னும் உயர்ந்த ரகக் காஃபி விளைகிறது. காஃபிப் பயிரை முதன் முதலில் பயிரிட்டவர் எம். எமிலிடி ஃபாண்ட்கிளேர் என்னும் வெள்ளையர். சிறுமலையின்மீது இவருடைய தந்தையார் பயிரிட்ட காஃபி விதைகளை இங்குக் கொணர்ந்து இவரும் பயிரிட்டார். இப்போது நம் நாட்டிற்கு நல்ல வருவாய் நல்கும் பயிராக இது இங்கு விளங்குகிறது. ஏலமும், இஞ்சியும் விளைய நல்ல நிழல் வேண்டியிருப்பதால் அடர்ந்த காடுகளிலேயே இவைகள் விளைகின்றன. ஏலம் ஐந்து ஆண்டுகளிலும், மஞ்சள் 18 மாதங்களிலும் பலன் கொடுக்கும். மஞ்சள் திறந்த வெளிகளிலேயே பயிரிடப்படுகிறது. மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, கொடித்திராட்சை, ப்ளம் திராட்சை, ஆப்பிள், பெர்ரி முதலிய பழங்களும் இங்கு விளைகின்றன.

மேற்பழனிமலையில் நெல், காஃபி, மட்டரகக் கோதுமை, மட்டரகப் பார்லி, வெள்ளைப்பூண்டு, பழ