பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215

வகைகள் ஆகியவை நிறைய விளைகின்றன. இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு பெரும் அளவில் நாடெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலைச்சரிவுகளில் அடுக்கடுக்காக நெல் வயல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையிலிருந்து இழிந்து வரும் நீரருவிகளைத் தடுத்துத் தேக்கி, சிறு வாய்க்கால்களின் மூலமாக நெல் வயலுக்குப் பாய்ச்சுகிறார்கள். இவர்கள் நெல் வயல்களில் எருவைக் கொட்டி மிதிப்பதில்லை. தேக்கிய நீரை வாய்க் கால்களின் மூலமாக எருக்குவியல்களிடையே பாய்ச்சி, அவற்றில் ஊறி வரும் நீரை நெல் வயல்களில் பாய்ச்சுகின்றனர். இங்கு விளையும் நெல் அவ்வளவு உயர்ந்த ரகத்தைச் சார்ந்ததல்ல. நெற்பயிர் முற்ற எட்டு அல்லது பத்து மாதங்கள் செல்லும்.

மக்கள்

குன்னுவர் :

நீலகிரி மலையின்மீது படகர் எவ்வாறு சிறந்த உழவர்களாக வாழ்கின்றனரோ, அதுபோல் பழனிமலையில் குன்னுவர் சிறந்த உழவர்களாக வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழ் மொழியே ஆகும். இவர்கள் தங்களைக் குன்னுவ வேளாளர் என்று கூறிக் கொள்கின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள தாராபுரம், காங்கயம் பகுதிகளே தங்கள் முன்னோர் வாழ்ந்த இடமென்றும் கூறுகின்றனர். போரும் பஞ்சமும் மிகுந்திருந்த காரணத்தால், ஐந்தாறு நூற்றாண்டுகட்கு முன் இவர்களின் முன்னோர்கள் சமவெளியிலிருந்து இங்குக் குடிபுகுந்தார்களாம். விஜயநகர மன்னர், மராட்டிய மன்னர், திப்புசுல்தான் ஆகியோரின் ஆட்சியில், வரிச்சுமை தாளாமலும் வேறு பல துன்பங் களுக்கு ஆட்பட்டும் வருந்தியவர்கள் பலர் இங்குக் குடி புகுந்தார்கள். ஒரு சமயம் கக்கற்கழிச்ச (Cholera) லினால் அவதிப்பட்ட சமவெளி மக்களும் இங்குக் குடி.