பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

களைத் தூய்மையோடு வைத்துக் கொள்வதற்காக, மாட்டிறைச்சியை உண்ணாமல் விலக்குகின்றனர். விழாவெடுத்த முதல் நாளில் மாயாண்டிக்கு ஓர் ஆடு பலியிடுகின்றனர். இரண்டாம் நாள் ஒரு பானையில் ராகிக் களி சமைத்து, கருமலையான் கோவிலில் வைத்து அதைச் சுற்றி ஆடுவார்கள். ஆடல் முடிந்ததும் எல்லோருக்கும் களி வழங்கப்படும். மூன்றாம் நாள் பூவாடை கோவிலில் படையல் துவங்கி எட்டு நாள் தொடர்ந்து நடைபெறும். விழா முடிவுறும்போது, ஆடல் சிறப்பாக நடைபெறும். புலையர்கள் ஆடலில் பெருவிருப்பம் கொண்டவர்கள். பங்குனித் திங்களில் ஆடவரும் பெண்டிரும் திரளாகக் கூடி, கொட்டும் பறையோசைக்கேற்பச் சுற்றியாடும் ஆட்டம் காண்டற்குரியது. புலையர்கள் மாட்டிறைச்சியையும், பன்றியிறைச்சியையும் விரும்பியுண்கின்றனர். எலியைக் கூட உண்ணும் பழக்கம் அவர்களிடம் உண்டு. 'யாரேனும் ஒருவன் பெரியம்மையால் பீடிக்கப்பட்டால், உற்றாரும் உறவினரும் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆடவரும் பெண்டிரும் உடல் தொடர்பு கொள்ளமாட்டார்கள்' என்று டர்ன்புல் என்ற வெள்ளையர் தம் நூலில் குறிப்பிடுகிறார். கல்ராயன் மலைகளில் வாழும் மலையாளிகளிடமும் இப்பழக்கம் உண்டு

கிருத்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு கி, பி, 1850-ஆம் ஆண்டில் ஒரு பாதிரி அனுப்பப்பட்டார். ஆனால் அப்பணி சரிவர நடைபெறவில்லை. இடையிலே தடைப்பட்டது. மீண்டும் அமெரிக்கத் திருச்சபையைச் சார்ந்த கிருத்தவப் பாதிரிமார் இங்கு சமயத்தைப் பரப்பப் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். கி. பி. 1850-ஆம் ஆண்டு சமயப் பிரசாரத்திற்காகப் புலையர்களிடையே சென்ற பாதிரியார் புலையர்களைப் பற்றிய சில குறிப்புகளைத் தம் கடிதங்களில் எழுதியுள்ளார், Madras Quarterly Missionary Journal