பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

221

for 1850-55-என்ற நூலில் அக்கடிதங்கள் காணப்படுகின்றன. அக்கடி தங்களில் காணப்படும் செய்திகள் பின் வருமாறு :

'வேட்டையாடுவதற்காகப் புலையர்கள் சில சமயங்களில் திரளாகக் கூடுவதுண்டு. வேட்டையில் கிடைத்த முதல் விலங்கின் தோலையோ அல்லது வேறு சில உறுப்புக்களையோ அருகிலுள்ள கோவிலுக்குக் காணிக்கையாக அனுப்புவர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களுடைய கடவுள் மன நிறைவு கொண்டு அவர்களுக்கு வேட்டையில் அதிகமான விலங்குகள் கிடைப்பதற்கு அருள்புரிவாராம். வேட்டையின் போது யாரேனும் இறந்துபட்டால், மிகவும் மரியாதையோடு அவன் உடலைக் காட்டில் அடக்கம் செய்வார்கள். அவ்வாறு இயந்தபட்டவன். புலையர்களின் மரியாதைக்குரியவனாகவும், வழிபாட்டிற்குரியவனாகவும் கருதப்படுகின்றான். புலையர்கள், அவர்களுடைய ஆண்டை (Masters) களான குன்னுவர்களால் மிகவும் அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின்றனர். குன்னுவர் புலையர்களுக்குக் கடும் வட்டிக்குப் பணம் கொடுத்து, அவர்களால் கொடுக்க இயலாதபோது, தங்கள் அடிமைகளாக ஆக்கிக் கொள்கின்றனர். குன்னுவர்கள் அவர்களை இரவில் விளக்கு வைத்துக் கொள்வதற்கும், கட்டிலில் படுத்துறங்குவதற்கும்கூட அனுமதிப்பதில்லை. நோய் நொடிகளைத் தீர்ப்பதற்குக் குன்னுவர்கள் புலையர்களையே பெரிதும் நாடவேண்டியிருக்கிறது. ஏனென்றால் காட்டிலுள்ள மூலிகைகளின் தன்மைகளை நன்குணர்ந்தவர்கள் புலையர்களே, பேய் பிடித்தவர்களைக் குணப்படுத்தும் திறமையும் அவர்களிடமே உள்ளது. ஏனென்றால் அம்மலை மீது வாழும் பேய் பிசாசுகளை வசப்படுத்தும் ஆற்றலை அவர்கள் பெற்றிருப்பதாகக் குன்னுவர்கள் கருதுகின்றனர். புலிகளை நஞ்சூட்டிக் கொல்லும் கலையைப் புலையர்கள் நன்கு அறிவார்கள். யாரேனும் ஒரு புலையன் ஒரு புலியை