பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

கோடைக்கானல் :

கோடைக்கானல் வட்டம் (taluk) மதுரை மாவட்டத்தைச் சார்ந்ததாகும். ஆங்கிலேயர்கள் கீழ்ப் பழனி மலை, மேற்பழனி மலை ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து கி. பி. 1889 ஆம் ஆண்டு இவ்வட்டத்தை அமைத்தனர். மேற்பழனிமலையின் மேல் அமைந்திருக்கும் கோடைக்கானல் நகரத்தின் பெயரால் இவ்வட்டமும் அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம் :

கோடைக்கானல் என்ற பெயர் அரசியலாரின் குறிப்புக்களில் கி. பி. 1860-ஆம் ஆண்டிற்கு மேல் காணப்படுகின்றது. இப்பெயர் இந்நகரத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. 'கானல்' என்ற சொல்லுக்குக் காடு அல்லது சோலை என்று பொருள். இதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் இப்பெயரில் அமைந்திருக்கும் நிலை மொழி (முன் சொல்) யான 'கோடை' எதைக் குறிக்சிறது என்பதே ஆராய்ச்சிக்குரியதாக இருக்கிறது. இந்நகரம் அமைந்துள்ள காடு, பழனிமலைகளின் கடைசியில் உள்ள தொடரின்மீது இருப்பதால் இது "கோடிக்கானல்' என்று முதலில் அழைக்கப்பட்டுப் பிறகு கோடைக்கானல் ஆயிற்று என்பர். வேறு சிலர் 'கொடிக்கானல்' என்ற பெயரே கோடைக்கானல் ஆயிற்று என்பர். இந்நகரைச் சூழ்ந்திருக்கும் காட்டில், பின்னிப் படர்ந்திருக்கும் எண்ணற்ற கொடிகளும், லியானா (Liana) முதலிய காட்டுமரங்களின் தொங்கும் வேர்களும், இப்பெயரை உறுதிப்படுத்துகின்றன. கோடைக் காலத்திலும் - பசுமையான இளமரக்காடுகளைப் பெற்றிருப்பதால், இது கோடைக்கானல் எனப் பெயர் பெற்றது என்று கூறுவாருமுண்டு. சங்க இலக்கியத்தில் கூடப் பசுமரக் காட்டைக் குறிப்பிடக் 'கோடைக்கானல்' என்ற தொடர் ஆளப்