பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

225

பட்டிருக்கிறது. 'கொடைக்கானலே' கோடைக்கானல் ஆகியிருக்கும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் இது யாருக்கு யாரால் கொடைப் பொருளாக அளிக்கப்பட்டது என்பது விளங்கவில்லை. கோடைக்கானல் பெருமழைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 91 அங்குல மழையைப் பெறுகிறது. இங்கு வாழும் மக்கள் எப்போதும் குடையும் கையுமாகத் திரிவதால் 'குடைக்கானல்' என்ற பெயரே கோடைக் கானலாக மாறியிருக்கும் என்றும் கூறலாம்.

வளர்ச்சியும் வரலாறும் :

கோடைக்கானல் நகர் பெரியகுளத்திற்கு நேர் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலமைந்துள்ளது. செங்குத்தாக உயர்ந்து செல்லும் தென்பக்க உச்சியின் ஓரத்தில் இந்நகரம் உள்ளது. மலை உச்சியில் தாழ்வான இடத்தைச் சுற்றியுள்ள சரிவுகளில் இந்நகரம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 2 கல்; அகலம் 1 கல். இவ்வுச்சியிலிருந்து காண்போருக்குச் சமவெளியின் தோற்றம் தெளிவாகத் தோன்றும். இந்நகரின் வடக்கில் மலையானது உயர்ந்தும், செங்குத்தாகவும் செல்லுகிறது. மேற்கில் உயர்ந்த மலைத்தொடர் தடுத்து நிற்கின்றது. கிழக்குப் பக்கத்தில் மலையானது சிறிது சிறிதாகத் தாழ்ந்து கீழ்ப்பழனி மலைகளை நோக்கிச் செல்லுகிறது. அப்பக்கத்தில் தான் மற்ற எல்லாச் சிகரங்களையும்விட உயர்ந்து அழகிய தோற்றத்தோடு பெருமாள் மலை நிற்கிறது. இதன் உயரம் 7326 அடி. கோடைக்கானல் அமைந்துள்ள சரிவுகளில் தென்பக்கத்துச் சரிவு, பசு மரங்களைத் தன்னகத்தில் நிறையக் கொண்டிருக்கிறது. தொலைவில் இருந்து காண்போருக்குத் தொங்கும் தோட்டமாக {hanging wood) அது தென்படும். இக்காடே கோடைக்கானல் என்று அழைக்கப்பட்டு, நகருக்கும் ஆகி வந்தது. நகருக்கு நடுவில் உள்ள தாழ்

கு.வ.-15